HUSHPURR சீக்ரட் வெல்னஸ் ப்ராடக்ட் ஸ்டோரை நடிகை Alya Manasa, திரு. ராதாகிருஷ்ணன், திருமதி. சுமதி ரமேஷ் ஆகியோரால் கிழக்கு தாம்பரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை ஹெராவி பிங்க் ஸ்டோர் பிரைவேட் லிமிடெட் தனது பெண்களுக்கான சீக்ரட் வெல்னஸ் ப்ராடக்ட் HUSHPURR என்ற பிராண்ட் பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
HUSHPURR பிராண்ட் அம்பாசிடர் மற்றும் புகழ்பெற்ற தொலைக்காட்சி கலைஞரும் சமூக ஊடகவியலாளருமான திருமதி Alya Manasa அவர்களால் இந்த தயாரிப்புகள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டன
HUSHPURR நிறுவனர் மற்றும் CEO திரு. ராதாகிருஷ்ணன் ஒரு ஆற்றல் மிக்க ஆளுமையும் முன்னாள் சீனியர் துணைத் தலைவரும் 25 வருட கார்பரெட் நிறுவன அனுபவமும், HUSHPURR இயக்குனர் திரு. வெங்கடேசன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமுள்ள லேண்ட்ஸ்கேப்பிங் துறையில் ஒரு புகழ்பெற்ற தொழில்முனைவர் இருவரும் சேர்ந்து HUSHPURR சீக்ரட் வெல்னஸ் ப்ராடக்டை உருவாக்கியுள்ளனர்.
மேலும், HUSHPURR 14 ஆகஸ்ட் 2024 அன்று ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. இது தென்னிந்தியாவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெண்களுக்கான HUSHPURR சீக்ரட் வெல்னஸ் ப்ராடக்டை அறிமுகப்படுத்தியதில் இரண்டாவது கடையாகும். தொழில்துறையின் ஆழமான புரிதலுடன் HUSHPURR சீக்ரட் வெல்னஸ் ப்ராடக்டை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு அவர்களின் நிபுணத்துவம் கை கொடுத்துள்ளது.
முதல் கட்டமாக தென்னிந்தியாவில் 125 ஸ்டோர்களுக்கான உரிமம் தொடங்கப்பட்டு, 2025-26 ஆம் ஆண்டிற்குள் முழு இந்தியாவையும் உள்ளடக்கி, 1000 பெண் தொழில்முனைவோர் உரிமையை உலகளாவிய பிராண்டாக மாற்றுவதற்கு பங்குதாரராக முன்மொழியப்பட்டுள்ளது.
ஒரு நகரம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு விற்பனை நிலையங்களில் HUSHPURR தயாரிப்புகள் கிடைப்பதை எளிதாக்குவதற்கும், அதைத் தொடர்ந்து பல்வேறு தளங்களில் ஆன்லைனில் கிடைப்பதை எளிதாக்குவதற்கும் சூப்பர் ஸ்டாக்கிஸ்டுக்கு செல்ல வேண்டிய தேவை அதிகமாகிவிட்டது.
சென்னையில் கிழக்கு தாம்பரத்தில் உள்ள சேலையூரில் HUSHPURR பிரான்சைஸ் சீரிஸ் ஸ்டோர்களின் முதல் அறிமுகம் இதுவாகும், இது HUSHPURR பிராண்ட் அம்பாசிடர் திருமதி Alya Manasa அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட மாபெரும் விழாவாகும். இதில் எதிர்கால வருங்கால உரிமையாளர்கள், பெண் தொழில்முனைவோர் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
சேலையூரின் HUSHPURR சீக்ரட் வெல்னஸ் ப்ராடக்ட் உரிமையாளர் தொழில்முனைவர் திருமதி சுமதி ரமேஷ் அவர்கள் ஒரு ஆற்றல்மிக்க ஆர்வமுள்ள நபர். இதை ஒரு வெற்றிகரமான வணிக முயற்சியாக மாற்றுவதில் மிகவும் ஆர்வமுடையவராக ஈடுபாட்டுடன் செய்கிறார்.