60-வது ஆண்டைக் கொண்டாடுகிறது வீனஸ்!

0
205

60-வது ஆண்டைக் கொண்டாடுகிறது வீனஸ்! 

நீடித்து உழைக்கும், சிறந்த செயல்பாடு உடைய இன்ஸ்டன்ட் மற்றும் ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர்கள் புதிதாக அறிமுகம்!

சென்னை, வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் (Venus Home Appliances) நிறுவனம், வாட்டர் ஹீட்டர் தொழில் துறையில் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் தனது 60-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு, புதிதாக இன்ஸ்டன்ட் அண்ட் ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர்களை (Instant and Storage Water heaters) அறிமுகம் செய்துள்ளது.

மிகச் சிறப்பான வாட்டர் ஹீட்டர் உருவாக்கத்தில் இந்நிறுவனம் மிகவும் பிரபலமானதாகும். மேலும் பல ஆண்டுகளாக வெளி நாடுகளுக்கு வாட்டர் ஹீட்டர்களை ஏற்றுமதி செய்வது அனைவரும் அறிந்ததே. இந்நிறுவனம் சமீபத்தில் ஃபேன் (Fan) மற்றும் சிறிய ரக மின்சாதனங்கள் தயாரிப்பிலும் இறங்கி தனது உற்பத்திப் பட்டியலை மேலும் அதிகரித்துள்ளது.

வாட்டர் ஹீட்டர் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நுகர்வோர்கள் பெரும்பாலும் நீடித்து உழைக்கும், துருப்பிடிக்காத மற்றும் கடின நீரை தாக்குப் பிடிக்கும் திறன் கொண்ட ஹீட்டர்களை விரும்புவது தெரியவந்துள்ளது. இதை அறிந்து வீனஸ் நிறுவனம் இதற்கேற்ற வகையில் அதிக எண்ணிக்கையிலான வாட்டர் ஹீட்டர் மாடல்களைத் தயாரித்து தற்போது அறிமுகம் செய்கிறது.

“நுகர்வோர்களின் விருப்பத்தை அறிந்து அதில் மேலும் பல புதிய சிந்தனைகளைப் புகுத்தி நம்பகமான, நீடித்து உழைக்கும் வகையிலான வாட்டர் ஹீட்டர்களைத் தயாரித்து அளித்து வருவதாக,’’ வீனஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு ராம்குமார் தெரிவித்துள்ளார். தங்களது புதிய தயாரிப்புகள் பல ஆண்டுகளுக்கு வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வெந்நீரை அளிக்கவல்லது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிறுவனம் 4 புதிய மாடல்களை – 2 ஸ்டோரேஜ் ரக மாடலையும், 2 இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் ரக மாடலையும் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

ஸ்ப்ளாஷ் புரோ:

புதிய அறிமுகமான ஸ்ப்ளாஷ் புரோ (Splash Pro) சீரிஸ் மாடல்கள் அனைத்தும் 2 செராமிக் எலிமெண்ட்கள் கொண்ட ஸ்கேல் கார்டு தொழில்நுட்பம் (Scale guard Technology) மற்றும் கடின நீரிலிருந்து பாதுகாப்பு – துருப்பிடிக்காமல் தாக்குப்பிடிக்க 5 துருப்பிடிக்காத தன்மைகளை உள்ளடக்கியுள்ளது. ஸ்கேல் கார்டு தொழில்நுட்பமானது வழக்கமான வாட்டர் ஹீட்டர்களை விட 10 சதவீதம் கூடுதலாக வெந்நீரை வழங்கும் திறன் கொண்டது.

ஸ்ப்ளாஷ் புரோ சீரிஸில் அறிமுகமாகியுள்ள 3 மாடல்கள்: ஸ்ப்ளாஷ் புரோ (Splash Pro), ஸ்ப்ளாஷ் புரோ ஸ்மார்ட் (Splash Pro Smart), ஸ்ப்ளாஷ் புரோ ஐ.ஓ.டி. (Splash Pro IoT) ஆகியவை ஆகும். இவை அனைத்தும் 4 வெவ்வேறு கொள்ளளவு கொண்ட மாடல்களில் (6,10,15 மற்றும் 25 லிட்டர் அளவுகளில்) கிடைக்கும். மேலும் கண்கவர் – மிஸ்டிக் ரோஸ் (Mystic Rose), பர்ப்பிள் ஹேஸ் (Purple Haze), ஸ்மோக்கி கிரே (Smokey Grey), கிராபைட் சில்வர் (Graphite Silver), டஸ்கன் கோல்டு (Tuscan Gold) – ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். ஸ்ப்ளாஷ் புரோ சீரிஸில் வெளிவந்துள்ள அனைத்து மாடல்களின் உள்புற டேங்கிற்கு 7 ஆண்டு உத்திரவாதமும், சூடேற்றும் பகுதிக்கு 4 ஆண்டு உத்திரவாதமும், ஒட்டுமொத்த தயாரிப்புக்கு 2 ஆண்டு உத்திரவாதமும் அளிக்கப்படும்.

வெக்ட்ரா:

மற்றொரு புதிய மாடலாக சதுர வடிவைக் கொண்ட வாட்டர் ஹீட்டராக வந்துள்ளது – வெக்ட்ரா (Vectra).  வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான, குளியலறையின் வண்ணப் பூச்சுக்கேற்ற நிறத்தை தேர்வு செய்யும் வகையில் இது 3 அழகிய வண்ணங்களில் – சன்செட் கோல்ட் (Sunset Gold), டிசைனர் பிளாக் (Designer Black) மற்றும் சில்வர் ஸ்பார்க்கிள் (Silver Sparkle) அறிமுகமாகியுள்ளது. 3 வெவ்வேறு கொள்ளளவுத் திறனில் (10, 15 மற்றும் 25 லிட்டர்) இது கிடைக்கும். வெக்ட்ரா மாடலின் உள்புற டேங்கிற்கு 7 ஆண்டும், சூடேற்றும் பகுதிக்கு 2 ஆண்டும், ஒட்டுமொத்த தயாரிப்புக்கு 2 ஆண்டு உத்திரவாதமும் அளிக்கப்படும்.

பிரிஸோ:

பிரிஸோ இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர்கள் (Brizo Instant Water heaters) 3 லிட்டர் பிரிவில் 3 அழகிய வண்ணங்களில் – சில்வர் சார்ம் (Silver Charm), சன்ஷைன் கோல்ட் (Sunshine Gold), பிரெஞ்சு வயலெட் (French Violet) – கிடைக்கும். இது போர்சலின் எனாமல் டேங்கைக் கொண்டது. இதில் நிறம் மாறும் ஸ்மார்ட் எல்.இ.டி இன்டிகேட்டர் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிக உயரமான குடியிருப்பில் வசித்தாலும் அதற்கேற்ப செயல்படும். நுன்னிய செயல்பாடு கொண்டது. உடனடியாக சூடேறும் வாட்டர் ஹீட்டரைத் தேடும் நுகர்வோருக்கு இது மிகவும் ஏற்றதாகும்.

இந்த சீசனுக்காக அறிமுகமாகும் பிற புதிய மாடல்கள்:

இந்நிறுவனம் ஜிஃபி (Jiffy) – என்ற பெயரிலான இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் மற்றும் வைப் (Vibe) – என்ற பெயரிலான ஸ்டீம் அயர்ன் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்துள்ளது. இது தவிர சமையலறைக்கேற்ற மைக்ரோவேவ் ஓவனை அறிமுகம் செய்து அந்தப் பிரிவிலும் கால் பதித்துள்ளது.