COVID-19 காலத்தில் ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா, டிஜிட்டல் முறையில் சாலை பாதுகாப்பு கல்வியை 2 லட்சத்திற்கு அதிகமானோருக்கு வழங்கியுள்ளது.!

0
247

COVID-19 காலத்தில் ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா, டிஜிட்டல் முறையில் சாலை பாதுகாப்பு கல்வியை 2 லட்சத்திற்கு அதிகமானோருக்கு வழங்கியுள்ளது.!

• 6 மாதங்களில், ‘ஹோண்டா சாலை பாதுகாப்பு E-Gurukul’ இந்தியா முழுவதும் 185- க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு சென்றடைந்தது.

சென்னை, 2020: ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட், இன்று தனது டிஜிட்டல் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முயற்சி – ‘ஹோண்டா சாலை பாதுகாப்பு E-Gurukul’ [Digital Road Safety initiative – ‘Honda Road Safety E-Gurukul’] மூலம் இந்தியா முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
மே 2020-ல் தொடங்கப்பட்ட, ஹோண்டா சாலை பாதுகாப்பு E-Gurukul’ முன்முயற்சி, முற்றிலும் புதிய இயல்புக்கு மாறியிருக்கும் இந்த நேரத்தில், தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தபடியே, சாலைகளில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை இந்தியா டிஜிட்டல் முறையில் கற்றுக்கொள்வதை உறுதிசெய்கிறது. எல்லா வயதினருக்கும் – 5 வயது குழந்தை, 18 வயது கற்றல் உரிம விண்ணப்பதாரர், 30 வயதிலிருக்கும் இல்லத்தரசி, ஒரு கார்ப்பரேட் ஊழியர் அல்லது ஏற்கனவே இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் என யாராக இருந்தாலும், இப்போது டிஜிட்டல் முறையில் ஹோண்டாவின் மூலம் சாலை பாதுகாப்பின் முக்கிய அம்சங்களை கற்கிறார்கள்.. மிகக் குறுகிய காலமாக 6 மாதங்களில், பாதுகாப்பான பயணத்தை ஊக்குவிக்கும் ஹோண்டாவின் பிரத்யேக குழு, இந்தியாவின் 185-க்கும் மேற்பட்ட ஊர்கள் மற்றும் நகரங்களை அடைந்துள்ளது – வடக்கில் உனா முதல் தெற்கில் விஜயவாடா மற்றும் கிழக்கில் முசாபர்பூர் மற்றும் மேற்கில் தானே வரை இந்தக் குழு சென்றுள்ளது.
இந்த மைல்கல் சாதனையினைக் குறித்து பேசிய ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெடின் பிராண்ட் & கம்யூனிகேஷன்ஸ் துறையின் மூத்த துணைத் தலைவர் திரு. பிரபு நாகராஜ். கூறுகையில், “சாலை பாதுகாப்பு ஹோண்டாவின் மைய புள்ளியாக உள்ளது. ஹோண்டா, பாதுகாப்பிற்கான இந்த அணுகுமுறையுடன், புதிய இயல்புடன் கூடிய சவாலான இந்த காலங்களில் சாலைகளில் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், மேலும் புதுமையான வழிகளையும் ஆராயத் தொடங்கியது கூடவே டிஜிட்டல் பயிற்சிகளைத் தொடங்கியது. வெறும் 6 மாதங்களில் 2 லட்சம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை டிஜிட்டல் முறையில் அணுகியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், அத்தியாவசிய சாலை பாதுகாப்பு பாடங்களைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கான இந்த மெய்நிகர் தளங்களை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம்.” என்றார்.
ஹோண்டா சாலை பாதுகாப்பு E-Gurukul’ லின் முக்கிய சிறப்பம்சங்கள் ’:
• விஞ்ஞான ரீதியாக வடிவமைக்கப்பட்ட கற்றல் தொகுதிகள்:
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சாலை பாதுகாப்பு செய்தியை திறம்பட பரப்புவதற்காக, ஹோண்டா பாதுகாப்பு பயணக் குழு உள்ளூர் மொழிகளில் பொருத்தமான கற்றல் தொகுதிக்கூறுகளை வெவ்வேறு பிராந்தியங்கள் மற்றும் வயதுக்குட்பட்ட மக்களுக்கு ஏற்றதாக வடிவமைத்துள்ளது.
இளம் வயதிலிருந்தே பாதுகாப்பான சாலையை உருவாக்குதல்:
6 மாதங்களில், ஹோண்டா சாலை பாதுகாப்பு பயிற்றுனர்கள் 497 பள்ளிகளில் 76,000 -க்கும் மேற்பட்ட இளம் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்துள்ளனர். போக்குவரத்து சிக்னல்கள், சாலையை எவ்வாறு கடப்பது? மிதிவண்டிகளில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும்? போன்ற அடிப்படை சாலை பாதுகாப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது.
வருங்கால ஓட்டுனர்கள் மற்றும் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஓட்டுனர்கள் மத்தியில் பாதுகாப்பான சாலை பயனர் நடத்தையை ஏற்படுத்துதல்:
402 கல்லூரிகள் மற்றும் 373 கார்ப்பரேட்டுகளைச் சேர்ந்த 1.36 லட்சம் பெரியவர்கள் ஹோண்டாவின் டிஜிட்டல் பயிற்சி அமர்வுகளின் ஒரு பகுதியாக பங்கேற்றனர்.. சாலையில் செல்லும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது (சாலை பாதுகாப்புக் குறீடுகள் மற்றும் அடையாளங்கள் போன்ற அடிப்படைக் கொள்கைகள் மட்டுமல்லாமல் குறைவாக அறியப்பட்ட சாலையில் முந்தும் போது, திரும்பும்போது அல்லது குறுக்கே மற்றும் ரவுண்டானாக்களை கடக்கும் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் வரை).
பிரத்யேக ஆன்லைன் கற்றல் அமர்வுகள்:
பெண்களை பாதுகாப்பான மற்றும் சுயாதீனமான ஓட்டுனர்கள் ஆக்குவதற்கு விரும்பும் ஹோண்டா, பெண்களுக்காக மட்டுமே ஆன்லைன் அமர்வுகளை நடத்தியது. 6 மாத காலப்பகுதியில் COVID-19 வீரர்கள், என்.சி.சி கேடட்கள் மற்றும் என்.எஸ்.எஸ் தன்னார்வலர்களுக்காக பிரத்தியேகமாக டிஜிட்டல் பயிற்சி அமர்வுகளையும் ஹோண்டா நடத்தியது.
சாலை பாதுகாப்பு விளம்பரத்தில் ஹோண்டாவின் மரபு:
1970-ம் ஆண்டில், பாதுகாப்பான ஓட்டுநர் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முதல் ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக விளங்கியது ஹோண்டா. அப்போதிலிருந்து, ஹோண்டா ஓட்டுனர்கள் மட்டுமல்ல, சாலையைப் பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் பாதுகாப்பு கல்வியை வழங்க உறுதிபூண்டுள்ளது. “அனைவருக்கும் பாதுகாப்பு” என்ற உலகளாவிய பாதுகாப்பு முழக்கத்தின் கீழ் செயல்படும் ஹோண்டாவின் சாலை பாதுகாப்பு அர்ப்பணிப்பு இப்போது உலகின் 41 நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது.
குறிப்பாக உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன சந்தையான இந்தியாவில், ஹோண்டா 2001-ம் ஆண்டு துவங்கியதிலிருந்து சாலைப் பாதுகாப்புக் கல்வியை ஊக்குவித்த முதல் இரு சக்கர வாகன உற்பத்தியாளராக இருந்து வருகிறது. 20 ஆண்டுகளில், ஹோண்டா தனது 3 தூண்கள் மூலமாக 38 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கல்வி மற்றும் பயிற்சியை வழங்கியுள்ளது. ஹோண்டாவின் 14 தத்தெடுக்கப்பட்ட போக்குவரத்து பயிற்சி பூங்காக்கள் (TTP) குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தினசரி கல்வித் திட்டங்களை நடத்துகின்றன, 6 பாதுகாப்பு ஓட்டுநர் கல்வி மையங்கள் (SDEC) கற்றல் உரிம விண்ணப்பதாரர்கள் மற்றும் போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றன. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து 1000+ ஹோண்டா டீலர்ஷிப்களும் புதிய வாடிக்கையாளர்களுக்கு முன் விநியோக பயிற்சியாக மெய்நிகர் சிமுலேட்டர் மூலம் நடைமுறை நுண்ணறிவுகளுடன் பாதுகாப்பு பயிற்சியை வழங்குகின்றன. கூடுதலாக, ஹோண்டாவின் திறமையான பாதுகாப்பு பயிற்றுனர்கள் பள்ளிகள், கல்லூரிகள், சங்கங்கள் மற்றும் நிறுவனங்களில் வழக்கமான விழிப்புணர்வு முகாம்கள் மூலம் செய்தியை மேலும் பலருக்கு எடுத்துச் செல்கின்றனர்.

Also Read:

Honda 2Wheelers India digitally spreads road safety education to 2 Lac+ people in the COVID-19 era