25 துறைகளைச் சேர்ந்த சிறந்த தொழிலதிபர்களுக்கு பிசினஸ் ‘வாரியர்ஸ் 22’ விருதுகளை வழங்கிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

0
120

25 துறைகளைச் சேர்ந்த சிறந்த தொழிலதிபர்களுக்கு பிசினஸ் ‘வாரியர்ஸ் 22’ விருதுகளை வழங்கிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

சோனாலி ஜெயின் மற்றும் கெளதம் ஜெயின் ஏற்பாட்டில் இரண்டாம் ஆண்டு சிறந்த தொழிலதிபர்களுக்கான பிசினஸ் வாரியர்ஸ்’22 விருதுகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கலந்துகொண்டு வழங்கினார்.

சென்னை எழும்பூரில் உள்ள ரேடிசன் புளூ நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டாம் ஆண்டு பிசினஸ் வாரியர்ஸ்’22 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொழில் அதிபர்கள் மற்றும் பிராண்டுகளை ஆதரிப்பதற்காகவும், பல வழிகளில் சமூகத்திற்குப் பங்களிப்பதற்காகவும், அதே நேரத்தில் வணிகம் மற்றும் பிராண்டையும் நகரத்தின் பேச்சாக வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் மற்றும் பிராண்டுகளுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு முயற்சியாகும். இது நார்வூட் ஸ்விட்ச்கள் என் ஆட்டோமேஷனின் ஒரு முன்முயற்சி.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சுகாதார செயலாளர், திரு.APJM ஷேக் சலீம் (இணை நிறுவனர் APJ அறக்கட்டளை) திரு.பிராஜ் கிஷோர் (தீயணைப்பு மற்றும் மீட்பு இயக்குனர்) ,திருமதி.யமுனாதேவி (கஸ்டம்ஸ் கமிஷனர்) தொழில் அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

சோனாலி ஜெயின் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஐந்து சிறந்த தொழிலதிபர்களுக்கு டாக்டர்.கோமதி நரசிம்மன் – டாக்டர்.ரேலா நிறுவனம் மற்றும் மருத்துவ மையம், டாக்டர்.RW அலெக்சாண்டர் ஜேசுதாசன் – இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், திரு.ராமநாதன் – இயக்குனர் ஸ்ரீநிதி கேபிடல் பிரைவேட் லிமிடெட்,திரு.சாம் பால் – ஸ்லாம் ஃபிட்னஸ்,திரு.பதம் துகர்- கிரடாய், சென்னை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு தனது கரங்களால் விருதுகளை வழங்கினார். மேலும் மொத்தமாக 25 நிறுவன தொழிலதிபர்களுக்கு பிசினஸ் வாரியர்ஸ்’22 விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறந்த தொழிலதிபர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் மிக முக்கிய நோக்கமாக தொழில்முனைவோர் உண்மையான ஹீரோக்கள் ஏனென்றால் அவர்கள் வேலை வாய்ப்பை உருவாக்க கூடியவர்கள் இதன் மூலம் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கூடியவர்களாக தொழில்முனைவோர்கள் இருக்கிறார்கள்.அப்படி பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய 25 மிகமுக்கிய தொழிலதிபர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தொழிலதிபர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என குறிப்பிட்டார். தொழிலதிபர்களுக்கான விருதுகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக கூறியவர்.

மேலும் இன்றைய தினம் தனக்கு மகிழ்ச்சிக்குரிய விஷயமாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் பூஜ்ஜியத்தை அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளதாக தெரிவித்தார்.

இத்தகைய காலகட்டத்தை பயன்படுத்தி தொழிலதிபர்கள் தங்களது தொழில்களை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று கூறினார்.

டாக்டர்.சாம்பால் (ஸ்லாம் ஃபிட்னஸ் நிறுவனர்) திரு.சி.கே. அசோக் (கிரீன்ட்ரெண்ட்ஸ் நிறுவனர்), திருமதி.கீதாஞ்சலி (வேலம்மாள் எம்.டி.) , திரு.ஜான் அலெக்ஸ், ஈக்விடாஸ் வங்கியின் இயக்குநர் திரு.அருண் சுரேஷ் (இயக்குனர் அருண் எக்செல்லோ) மற்றும் பலர் கலந்து கொண்டு விருது வழங்கும் விழாவை சிறப்பித்தனர்.

ஜிஆர் ஈவன்ட்ஸ் சோனாலி ஜெயின் & காஷிஷ் ஜெயின் மூலம் நடத்தப்பட்ட சென்னையில் நடந்த முதல் வகையான நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.