2021-ம் ஆண்டில் 10,000 கோடி டாலரை தாண்டிய இந்தியா – அமெரிக்கா வர்த்தகம்

0
59

2021-ம் ஆண்டில் 10,000 கோடி டாலரை தாண்டிய இந்தியா – அமெரிக்கா வர்த்தகம்

இந்தியா -அமெரிக்கா இடையே, கடந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக 10,000 கோடி டாலரைக் கடந்திருக்கிறது என அமெரிக்க புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் சுமார் 7,300 கோடி டாலர் அளவுக்கு அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்திருப்பதாகவும் 4,000 கோடி டாலர் அளவுக்கு இறக்குமதி செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த வர்த்தகம் 11,330 கோடி டாலராக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் இந்தியா -அமெரிக்கா வர்த்தகத்தைவிட, இது 45 சதவிகித உயர்வாகும். கடந்த ஆண்டில் வர்த்தகம் அதிகரித்த தனது 15 வர்த்தக கூட்டாளி நாடுகளிலேயே இந்தியாதான் முதலிடம் வகிப்பதாகவும் அமெரிக்க புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது.