வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையில் சி.எம்.ஆரின் (CMR) வெர்சியஸ் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறையை தமிழக அரசின் மாண்புமிகு சுகாதாரம் – குடும்ப நலத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!

0
313

வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையில் சி.எம்.ஆரின் (CMR) வெர்சியஸ் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறையை தமிழக அரசின் மாண்புமிகு சுகாதாரம் – குடும்ப நலத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!

  • திறன் வாய்ந்த குறைந்த அளவு ஊடுருவும் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை வசதியை, இனி நோயாளிகள் பெறலாம்!

 சென்னை, அக். 5, 2022

குறைந்த அளவு ஊடுருவக்கூடிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை (Robotic Surgery) முறையை வழங்குவதன் மூலம், பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சென்னையின் முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒன்றாகிய சென்னை – வடபழனி, சிம்ஸ் மருத்துவமனை (SIMS Hospital)வெர்சியஸ் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறையைத் (Versius Robotic Surgical System) தொடங்கியுள்ளது.

தமிழக அரசின் மாண்புமிகு சுகாதாரம் – குடும்ப நலத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் புதிய சிகிச்சை முறையைத் தொடங்கி வைத்தார். எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். இந்தப் புதிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறை மருத்துவக் குழுவினருக்கும் நோயாளிகளுக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம் ஆகும். அதிக செலவில்லாத, கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் தொடங்கி, குறைந்த வலி – அதிகம் ஊடுருவாத தன்மை, தழும்புகள் மற்றும் ரத்த இழப்பும் குறைவு, நோயாளிகள் விரைவாக குணமடையும் வசதி, குறைந்த நாள் மருத்துவமனையில் தங்குதல் போன்ற நன்மைகளின் மூலம் அவர்களுடைய வழக்கமான வேலைகளை மீண்டும் தொடங்க பாரம்பரிய அறுவை சிகிச்சை முறைகளைவிட இந்தப் புதிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறை உள்ளது.

இவ்விழாவின்போது எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கூறுகையில், “ரோபாட் உதவியுடனான அறுவை சிகிச்சை முறையானது, சமீப கால அறுவை சிகிச்சை முறையை தலைகீழாக மாற்றியுள்ளது. சிம்ஸ் மருத்துவமனை குறைந்த அளவே ஊடுருவக்கூடிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை தீர்வைப் போன்ற முன்னோடி செயல்முறையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறது. சிறுநீரகம் (Urology), மகளிர் மருத்துவம் (Gynaecology), இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை (Surgical Gastroenterology), புற்றுநோயியல் அறுவை சிகிச்சை (Surgical Oncology), கார்டியோதொராசிக் (Cardiothoracic), காது-மூக்கு-தொண்டை (ENT), பொது அறுவை சிகிச்சை (General Surgery) போன்ற பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்க இந்த நவீன தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். இந்த அமைப்பின் அதிகரித்த நெகிழ்வுத்தன்மை, அதிகக் கச்சிதம், மேம்பட்ட துல்லியம், மேம்பட்ட திறன் ஆகியவற்றுடன் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுடன் கூடிய வகையில் பொதுவான, சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்”.

ரோபாட்டிக் அறுவை சிகிச்சையின் நன்மைகள் பற்றி சிம்ஸ் மருத்துவமனையின் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட்ரோஎன்டராலஜி (Institute of Gastroenterology) மற்றும் ஹெபடோபிலியரி சயின்ஸ், டிரான்ஸ்பிளான்டேஷனின் (Hepatobiliary Science and Transplantation) இயக்குனரும், இரைப்பை குடலியல் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் பட்டா ராதாகிருஷ்ணன் (Dr Patta Radhakrishnan) கூறுகையில், “அடுத்த தலைமுறை அறுவை சிகிச்சை ரோபாட் என்பது செயற்கை நுண்ணறிவு – இயந்திர கற்றல் மூலம் செயல்படுகிறது. இது பாரம்பரிய அறுவை சிகிச்சைகளில் பெரிய அளவில் உடலைக் கீறுவதுபோல் இல்லாமல், ஒன்று அல்லது சில சிறிய கீறல்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்யும் வசதியை அளிக்கிறது. இந்த அமைப்பு மிகவும் பெரிதாக்கப்பட்ட 3D உயர்நிலை பார்வையை வழங்குகிறது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் பகுதியை ஆழமாகப் பகுப்பாய்வு செய்யவும் துல்லியமான அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவும் இது உதவுகிறது. இது நிகழ்நேரத்தில் அறுவை சிகிச்சை நிபுணரின் கை அசைவுகளை எளிதாக்குகிறது. அத்துடன் செயல்முறையின்போது கருவிகளை வளைக்கலாம், சுழற்றலாம், இந்த வகையான ரோபாட் அறுவை சிகிச்சை மூலம் குறைந்த காலத்தில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பலாம். அறுவை சிகிச்சைக்குப் பின் அவர்களின் வாழ்க்கைத் தரமும் பெருமளவு மேம்படும்.

ரோபாட்டிக்-குறைந்த அளவு ஊடுருவும் அறுவை சிகிச்சை வசதிகள் நாட்டின் மூலை முடுக்குக்குப் பரவியிருந்தாலும், இந்த செயல்முறை பற்றிய விழிப்புணர்வோ மிகவும் குறைவாக உள்ளது. இன்னும் இது பரவலான மக்களை சென்றடையவில்லை. மேலும், இந்தியாவில் பல அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த நடைமுறையில் உரிய பயிற்சியைப் பெறவில்லை. நாட்டில் இதன் பயன்பாடு மிகவும் குறைவாக உள்ளது. மேலும், குறைந்த அளவு ஊடுருவும் அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு உரிய வகையில் வரையறுக்கப்பட்ட, புரிதலைத் தரும் படிப்புகளை வழங்கும் தரமான பயிற்சி நிறுவனங்களுக்கு பெரும் பற்றாக்குறை இங்கு நிலவுகிறது. இவை அனைத்தையும் மனதில் கொண்டு, ஏற்கனவே உள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் வசதிகள் ஆகியவற்றுடன் குறைந்த அளவு ஊடுருவும் அறுவை சிகிச்சைக்கான வன்பொருள்-உள்கட்டமைப்பு வசதிகளுடன் சிம்ஸ் மருத்துவமனையில் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தை வழங்க முயற்சித்துள்ளோம்.

அடுத்த தலைமுறை மாணவர்கள் குறைந்த அளவு ஊடுருவும் ரோபாட்டிக், லேபராஸ்கோபிக் (Laparoscopic) அறுவை சிகிச்சைகளின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இந்தத் துறையில் அனுபவத்தைப் பெறுவதற்கும் இது உதவும். ரோபோட்டிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் திட்டத்தை மேலும் நம்பகமானதாக மாற்ற எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துடன் இணைந்து சான்றிதழ் படிப்பைக் கற்றுத் தரவும் நாங்கள் உத்தேசித்துள்ளோம்” என்றார்.