ரவுண்ட் டேபிள் லேடிஸ் சர்க்கிள் மற்றும் நேச்சுரல்ஸ் சலூன் இணைந்து திருநங்கைகளுக்கான தொழிற்பயிற்சி வகுப்புகளை தொடங்கிவைத்து சமத்துவத்தை ஊக்குவிக்கும் வார விழாவை கொண்டாடினர்

0
118
ரவுண்ட் டேபிள் லேடிஸ் சர்க்கிள் மற்றும் நேச்சுரல்ஸ் சலூன் இணைந்து திருநங்கைகளுக்கான தொழிற்பயிற்சி வகுப்புகளை தொடங்கிவைத்து சமத்துவத்தை ஊக்குவிக்கும் வார விழாவை கொண்டாடினர்.
ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள்,  ரவுண்ட் டேபிள் இந்தியா வாரத்தைக் கொண்டாடுகின்றன. இதன் ஒருபகுதியாக  சமத்துவத்தை முன்னெடுக்கும் ஒரு நாளாக  இந்த விழா கொண்டாடபட்டது. மேலும் 5 திருநங்கைகளுக்கு அழகு மற்றும் அழகியல் குறித்த பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டு, அழகு, தோல் பராமரிப்பு, அழகியல் மற்றும் முடி பராமரிப்பு ஆகியவற்றில் பயிற்சி அளிக்க நேச்சுரல்ஸ் சலூன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனர் வீணா குமார்வேல் இது குறித்து,  5 திருநங்கைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ள ரவுண்ட்  டேபிள் இந்தியாவின் முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மேலும் அந்த அமைப்புடன் நேச்சுரல்ஸ் சலூன் கை கோர்த்திருப்பது பெருமையான விஷயம் என்றார்.
இந்த நிகழ்வில் பிரபல பேஷன் கொரியோகிராபரும், LGBTIQ+ ஆர்வலருமான  கருண்ராமன், லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பின் பகுதி தலைவர்  திவ்யா சேத்தன், பகுதி செயலாளர் மற்றும் பொருளாளர் தன்யா சேத்தி, ரவுண்ட் டேபிள் இந்தியா தலைவர் குணால் சௌத்ரி,  ஜஸ்னீத் கவுர் கோஹ்லி,   மெட்ராஸ் ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் தலைவர் பிரம்ஜோத் சிங் கோலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அரசுத் தேர்வுக்கு தயாராகும் 3 திருநங்கைகளுக்கு படிப்பதற்கான உபகரணங்களை பிரம்ஜோத்சிங் கோலி வழங்கினார்.