புதிய தொழில் முனைவோர்களுக்கு  வழிகாட்டும் Bizpire Expo 2022

0
156
புதிய தொழில் முனைவோர்களுக்கு  வழிகாட்டும் Bizpire Expo 2022 வணிகம் தொடர்பான  கருத்தரங்கில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன்,சுரேஷ் போரா,  AZPIRE  நிறுவனத் தலைவர் விஜயராகவன்,ஆதித்யாராம் ப்ராப்பர்ட்டீஸ்ன் தலைவர் மற்றும் நிறுவனர் ஆதித்யாராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வணிகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக தொழில்முனைவோர்களிடம் கலந்துரையாடினர்

Bizpire Expo 2022 என்கிற தொழில்முனைவோர் களுக்கான வணிகம் குறித்த கருத்தரங்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  கிரௌன் பிளாசா நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

BNI AZPIRE  நிறுவனத்தின் தலைவர் விஜயராகவன்  தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், சுரேஷ் போரா,ஆதித்யாராம் ப்ராப்பர்ட்டீஸ்ன் தலைவர் மற்றும் நிறுவனர் ஆதித்யாராம் BIZPIRE EXPO 2022  நிகழ்ச்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்… இந்த   அரங்குகளில் AZPIRE  தொழில் முனைவோர் உறுப்பினர்களின் தயாரிப்புகள் 70 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற  வணிகம் குறித்த  கருத்தரங்கை  நல்லம்மை,மீரா நாகராஜன்,மது சரண்,வீணா குமாரவேலு  ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்…

இந்த கருத்தரங்கில் கட்டிடக்கலை, தகவல் தொழில்நுட்பம்  உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த  தொழில்  முனைவோர்களான azpire  உறுப்பினர்கள் முதல் அமர்வில் 60  உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்…
உலகளாவிய அளவில் BNI BIZPIRE   நிறுவனம் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 76 நாடுகளில்10,799 கிளைகளுடன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 91 ஆயிரத்து 714  பேர் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது

இதன் மூலம் உலக அளவில் செய்யப்படும்  வணிகம் தொடர்பான பரிந்துரைகள் Bizpire expo  மூலம் விரைவில் உறுதிப்படுத்தப்படும்

Bizpire expo2022 வணிக  நிறுவனத்தில் இணைய விரும்பும்  தொழில்முனைவோர்கள் 9840379299 என்கிற தொடர்பு எண்ணை தொடர்பு  கொள்ளலாம் இதன் மூலம் தொழில் முனைவோர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை தங்களது அரங்குகளில் காட்சிப்படுத்தப்படும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Azpire expo2022  வணிகம் குறித்த கருத்தரங்கில் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன்,ஆதித்யாராம் ப்ராப்பர்ட்டீஸ்ன் தலைவர் மற்றும் நிறுவனர் ஆதித்யாராம்,பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் வணிகம் குறித்தும் வணிகத்தில் முதலீடு செய்வது குறித்து azpire  உறுப்பினர்களுடனான கருத்தரங்கில் பேசினர்…