நீட்- 2021 தேர்வில் அகில இந்திய அளவில் சாதனை படைத்த வேலம்மாள் மாணவர்களுக்குப் பாராட்டு விழா

0
149

நீட்- 2021 தேர்வில் அகில இந்திய அளவில் சாதனை படைத்த வேலம்மாள் மாணவர்களுக்குப் பாராட்டு விழா.

நீட் 2021 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், 2021 நவம்பர் 2 ஆம் தேதி, முகப்பேரில் உள்ள வேலம்மாள் ஐஐடி நீட் அகாடமி வளாகத்தில் வெகு விமரிசையாகப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

வேலம்மாள் மாணவர்களின் சாதனைகள் பின்வருமாறு.

அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவைச் சேர்ந்த மாணவன்
ஹயக்ரீவியாஸ் 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் பொதுப் பிரிவில் 56 வது இடத்தையும், இதர வகுப்பினர் பிரிவில் 13 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். மற்றொரு மாணவன் பி.சர்வேஷ் 720 க்கு 695 மதிப்பெண்களும் மற்றும் மாணவி பவித்ரா தர்ஷினி 720 க்கு682 மதிப்பெண்களும்  பெற்று சாதனை படைத்திருந்தனர்.

மாணவர்களைப் பாராட்டி நடைபெற்ற விழாவில் சாதனை படைத்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட வேலம்மாள் ஐஐடி-நீட் அகாடமியின் முதல்வர். ஸ்ரீ அசோக் வர்மா, வேலம்மாள் பள்ளி கல்வி இயக்குநர்
திருமதி. ஜெயந்தி ராஜகோபாலன் ஆகியோர் ஆற்றல் மிக்க சாதனையாளர்களைப் பெற்றோர் முன்னிலையில் பாராட்டி கவுரவித்தனர்.

அதன் பின்னர் திருமதி. ஜெயந்தி ராஜகோபாலன், அவரைத் தொடர்ந்து ஸ்ரீ அசோக் வர்மா ஆகியோரின் எழுச்சியூட்டும் உரை, மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக
இருந்தது. அதனைத் தொடர்ந்து சாதனை மாணவர்கள் தமது அணித் தோழர்களுடன்
வெற்றிக்கொண்டாட்டத்தின் நிறைவுப் பகுதியாக கேக் வெட்டும் நிகழ்வினை மகிழ்ச்சியுடன் இனிதே நிறைவேற்றினர்.

பின்னர் சாதனை மாணவன், எம்.பி. ஹயக்ரீவியாஸ் தான் கடந்து வந்த வெற்றிப் பயணத்தின் சுவடுகளைப் பகிர்ந்து கொண்டார், இது எதிர் வரவிருக்கும் நீட் ஆர்வமுடைய மாணவர்களுக்கு   உத்வேகம் அளிப்பதாக இருந்தது.

முன்னதாக 2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA)
செப்டம்பர் 12, 2021 அன்று நேரடி எழுத்து முறைத் தேர்வாக நாடு முழுவதும் 3800 மையங்களில்  நடத்தியது. 360 வேலம்மாள் பள்ளி மாணவர்கள் இத்தேர்வெழுதி சிறந்த மதிப்பெண்களுடன் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.