திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஆன்லைனில் தங்கும் அறை முன்பதிவு ரத்து

0
265

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஆன்லைனில் தங்கும் அறை முன்பதிவு ரத்து

திருப்பதி : திருப்பதியில் வருகிற 2022-ம் ஆண்டு ஜனவரி 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி, 14-ந்தேதி வைகுண்ட துவாதசி உள்ளிட்ட உற்சவங்களை முன்னிட்டு அடுத்த மாதம் 11 முதல் 14-ந்தேதி வரை திருமலையில் உள்ள வாடகை அறையின் இணைய தளம் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த நாட்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் நேரடி முன்பதிவு மூலமாக மட்டுமே அறைகளை வழங்க முடிவு செய்துள்ளது.

எம். பி. சி. 34, கவுஸ்துபம் ஓய்வறை, டி.பி.சி. கவுண்ட்டர், ஏ.ஆர்.சி. கவுண்டர்களில் ஜனவரி மாதம் 11-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை வாடகை அறைகள் வழங்கப்படமாட்டாது.

நன்கொடையாளர்களுக்கு அறை வழங்குவதில் முன்னுரிமை கிடையாது. தரிசனத்துக்கு வரும் வி.ஐ.பி.களுக்கு வெங்கடாசல நிலையம், ராமராஜு நிலையம், சீதா நிலையம், சந்நிதானம், கோவிந்தசாய் ஓய்வறை உள்ளிட்ட இடங்களில் அறைகள் வழங்கும் கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலமாக மட்டுமே அறைகள் வழங்கப்படும்.

நேரடியாக வரும் வி.ஐ.பி.களுக்கு அதிகபட்சம் 2 அறைகள் மட்டுமே வழங்கப்படும்.

சாதாரண பக்தர்கள் அனைவரும் மத்திய விசாரணை அலுவலகத்தில் (சி.ஆர்.ஓ.) உள்ள கவுண்டர்களில் நேரடியாக வந்து தங்கள் அறைகளை முன்பதிவு மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.