சௌத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன் அமைப்பின் தலைவராக ஜான் அமலனுக்கு  தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்…

0
117
சௌத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன் அமைப்பின் தலைவராக ஜான் அமலனுக்கு  தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்… இதனைத் தொடர்ந்து விளையாட்டு துறை வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பு  அளித்ததற்கான indian Awards 2022 விருதினை விளையாட்டுத்துறை  அமைச்சர் சிவ.மெய்யநாதனுக்கு  விஜய் வசந்த் எம்பி  மற்றும் ஜான் அமலன் ஆகியோர் இணைந்து வழங்கினர்
 இளைஞர்களின் கிரிக்கெட் கனவை நனவாக்கும் விதமாக சௌத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன்  (South India Schools Cricket Associations) அமைப்பு  தொடங்கப்பட்டுள்ளது.

 இதன் தொடக்க நிகழ்ச்சி (16/08/22) சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. கிரிக்கெட் அசோசியேஷன் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்  உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டார்.

 தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்  சௌத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன்  (South India Schools Cricket Associations) அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜான் அமலனுக்கு  விளையாட்டு துறை அமைச்சர்  பதவிப்பிரமாணம் செய்து வைத்தார், அதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளராக பிரதீப்குமார்செயலாளராக ஜோஸ்வா எடிசன், பொருளாளராக குடந்தை அஷ்ரப்  ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்

மேலும்,South India Schools Cricket Associations கௌரவத் தலைவராக சினேகா நாயரும், தமிழ்நாடு ஸ்கூல் கிரிக்கெட் பெடரேஷன் கௌரவத் தலைவராக அப்துல்கலாம் அவர்களின் பேரனுமான ஏ.பி.ஜே.எம்.ஜே.ஷேக் சலீம்,தமிழ்நாடு ஸ்கூல்ஸ் கிரிக்கெட் பெடரேஷன் தலைவராக விக்னேஷ் மற்றும் தமிழ்நாடு ஸ்கூல்ஸ்  கிரிக்கெட் பெடரேஷன் துணைத்தலைவராக கண்மணி பாண்டியன் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்
 
இந்தியாவில் அதிக மக்களால் விளையாடப்படும் மற்றும் விரும்பப்படும் விளையாட்டு கிரிக்கெட் போட்டி ஆனால், பலர் திறமை இருந்தும் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க முடியாமல் போகிறது. காரணம், இளம் வயதில் திறமையாக கிரிக்கெட் விளையாடும் பலருக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல வழி தெரியாததும், சரியான வழிகாட்டி இல்லாததும் தான்.

அந்த வகையில் கிரிக்கெட்டில் திறமை மிக்க இளைஞர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதோடு  திறமையாளர்களை தேசிய அளவிலான போட்டிகளில்  பங்கேற்க வைப்பதற்கான தளமாக South India Schools Cricket Associations உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

South India Schools Cricket Associations அமைப்பின் தலைவராக ஜான் அமலனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் 

 சவுத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன் பதவி பிரமாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும்  கடந்த ஓராண்டு காலமாக தமிழக முதலமைச்சர் விளையாட்டு துறைக்காக பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி  வருவதாகக் கூறினார்

 உலகமே தமிழகத்தை உற்றுநோக்கும் விதமாக நடைபெற்று முடிந்துள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரதமர் மற்றும் முதலமைச்சர் முன்னிலையில்  தொடங்கப்பட்டது. இதன் மூலம்  உலகின் கவனத்தை தமிழகம் ஈர்த்துள்ளதாக  கூறினார்

 இதன் மூலம் தமிழக மக்களின் பண்பாடு கலாச்சாரம் விருந்தோம்பல்  போன்றவற்றை 21ம்  நூற்றாண்டில் தமிழக முதல்வர் எடுத்துச் சென்றிருக்கிறார்

 விளையாட்டு என்பது மிக  முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று விளையாட்டு மைதானம் உள்ள  ஊர்களில் சாதி மதம் என்பது இருக்காது.

 கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகிகள் தன்னிடம் மூன்று மாதங்களுக்கு முன்பாக  பள்ளி அளவிலான மாணவர்களுக்கு கிரிக்கெட் போட்டியை எடுத்துச் செல்லும் விதமாக  கிரிக்கெட் அசோசியேஷன் தொடங்க உள்ளதாக கூறிய போது உண்மையில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார்

 விளையாட்டு என்பது பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது குறிப்பாக தவறான பாதையில் செல்லும் இளைஞர்களை ஒழுங்குபடுத்துவது விளையாட்டு  என்றும்

 தற்போது தொடங்கப்பட்டுள்ள சவுத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேஷன் அமைப்பிற்கு தங்களது முழு ஒத்துழைப்பு இருக்கும் என கூறினார்.