கோவையில் 2022 ஆம் ஆண்டுக்கான Mr Miss & Mrs Tamilnadu அழகுப்போட்டி- யுகியோ நிறுவன தலைவர்கள் ஹாஜா – நிகில் அறிவிப்பு

0
345

கோவையில் 2022 ஆம் ஆண்டுக்கான Mr Miss & Mrs Tamilnadu அழகுப்போட்டி- யுகியோ நிறுவன தலைவர்கள் ஹாஜா – நிகில் அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான Mr Miss & Mrs. Tamilnadu அழகுப்போட்டி கோவையில்  நடத்தப்பட உள்ளதாக யுகியோ நிறுவன தலைவர்கள் ஹாஜா மற்றும் நிகில் ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி இந்தியன் மீடியா ஓர்க்ஸ் நிறுவனத் தலைவர் ஜான் அமலன் ஆதரவுடன் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
சென்னை தேனாம்பேட்டையில் இது தொடர்பாக  ஃபாஷன் இயக்குனர்கள் கருண் ராமன், வினோத், ஆல்ஃபிரெட் ஜோஸ், அபர்னா(Mrs.Tamizhagam 2022) உள்ளிட்டோர்
செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, ஜான் அமலன் ஆதரவுடன் யுகியோ நிறுவனத்தின் சார்பில்  2022 ஆம் ஆண்டுக்கான Mr.Miss & Mrs.Tamilnadu கோவை விஜய் எலன்சா நட்சத்திர விடுதியில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி நடை பெற உள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.
சென்னையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏராளமாக நடப்பதால் இம்முறை கோவையை தேர்வு செய்ததாக தெரிவித்த அவர்கள், ஹாஜா மற்றும் நிகில் ஆகியோர் நிகழ்ச்சி முழுவதையும் ஒருங்கிணைக்க உள்ளதாகவும் கூறினர். இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் தலா 30 பேர், திருமதிகள் மற்றும் குழந்தைகள் தலா 20 பேர் என மொத்தம் 100 பேர் பங்கேற்க உள்ளனர். 2 சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் Indian Media Works நடத்தும் சர்வதேச அழகுப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற அதிரடி அறிவிப்பையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
யுகியோ நிறுவனத்தின் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் கருண் ராமன், ஆல்ஃபிரெட் ஜோஸ் மற்றும் பல திரை நட்சத்திரங்கள் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜா மற்றும் நிகில்  ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த கருண்ராமன், அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதாக ஜான் அமலனை பாராட்டினார். இது போன்ற ஃபாஷன் நிகழ்ச்சிகள் நடத்துவது சாதாரண விஷயமல்ல என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் இருந்து நிறைய திறமைசாலிகள் உருவாக வேண்டும் என்றார்.
பின்னர் பேசிய ஆல்ஃபிரெட் ஜோஸ், எந்த ஒரு நிகழ்ச்சியும் ஜான் அமலன் இருந்தால் வெற்றி பெறுவது உறுதி என்றார். இது போன்ற முயற்சிகள் சாதாரணமானதல்ல என்று கூறிய அவர் இதனை ஒருங்கிணைத்த யுகியோ நிறுவனம் மற்றும் அதன் தலைவர்கள் ஹாஜா மற்றும் நிகில்  ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். இது போன்ற நிகழ்ச்சிகள் மக்களை சென்றடைய பிரபலப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர்,  தானும் கருண்ராமனும் நிகழ்ச்சி நடுவர்களாக  இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
மேலும் இந்த அழகிப் போட்டியை வினோத் அவர்கள் கோரியோ செய்ய உள்ளார் என யுகியோ நிறுவனம் தெரிவித்தது.