கீதம் வெஜ் ரெஸ்டாரண்ட்களை நடத்தி வரும் ஜி.வி.ஆர்.  ஃபுட்ஸ் நிறுவனமும், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் ஓட்டல் மேனேஜ்மேண்ட் ஸ்கூலும் இணைந்து, கூட்டாகப் பயிற்சிகளை மேற்கொள்ள ஒப்பந்தம்! 

0
207

கீதம் வெஜ் ரெஸ்டாரண்ட்களை நடத்தி வரும் ஜி.வி.ஆர்.  ஃபுட்ஸ் நிறுவனமும், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் ஓட்டல் மேனேஜ்மேண்ட் ஸ்கூலும் இணைந்து, கூட்டாகப் பயிற்சிகளை மேற்கொள்ள ஒப்பந்தம்!  

சென்னை, மே 20, 2023

ஜி.வி.ஆர். ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் (GVR Foods Private Limited) நிறுவனம், சென்னையில் ‘கீதம் வெஜ்’ (Geetham Veg) என்ற முன்னணி சைவ ஹோட்டல் சங்கிலித் தொடர் ரெஸ்டாரண்டுகளை நடத்திவருகிறது. இந்நிறுவனம் இந்தியாவின் சிறந்த தரமதிப்பீட்டைப் பெற்ற மணிப்பால் பல்கலைக்கழகத்தின் ஓட்டல் மேனேஜ்மேண்ட் கல்வி நிறுவனமாகிய வெல்கம் குரூப் கிராஜூவேட் ஸ்கூல் ஆஃப் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் (Welcomgroup Graduate School of Hotel Administration – WGSHA) உடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள இன்று (20 மே 2023) சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

மணிப்பால் உயர்கல்வி அகாடமி நிகர்நிலை பல்கலைக்கழகம் (Manipal Academy of Higher Education) ஐ.டி.சி. ஹோட்டல்களின் (ITC Hotels) ஒரு பிரிவான வெல்கம் குரூப் (Welcomgroup) உடன் இணைந்து இந்தக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

டபிள்யூ.ஜி.எஸ்.எச்.ஏ. (WGSHA) மாணவர்களின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும்.

கீதம் வெஜ் உணவகத்தைப் பொறுத்தவரையில், இந்த ஒப்பந்தமானது, தமது மெனுவில், புதுமையான உணவு வகைகளை அறிமுகப்படுத்தவும், பயிற்சி, கூட்டு-ஆராய்ச்சி, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் 150 பேர் கொண்ட சமையல் நிபுணர் குழுவிற்கு பணி சார்ந்த மேம்பாட்டிற்கும், தொழில் நுணுக்கத்தை எளிதாக்குவதற்கும் உதவும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜி.வி.ஆர். ஃபுட்ஸ் நிர்வாக இயக்குனர் திரு. நாராயண ராவ் முரளி மற்றும் டபிள்யூ.ஜி.எஸ்.எச்.ஏ.-வின் முதல்வர் டாக்டர் செஃப் கே. திருஞானசம்பந்தம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

டபிள்யூ.ஜி.எஸ்.எச்.ஏ. உடன் இணைந்து செயல்படுவது பற்றி கருத்து தெரிவித்த திரு. முரளி என். பட், “இந்தியாவின் முன்னணி விருந்தோம்பல் பள்ளியுடன் முறையாக இணைந்து செயல்படுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக் கூட்டுச் செயல்பாடு மூலம், எங்கள் தொழில் நிபுணத்துவத்தை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.  அதே நேரம் அடுத்த தலைமுறை விருந்தோம்பல் நிபுணர்களிடமிருந்து புதிய பார்வையையும் புதிய கண்ணோட்டத்தையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் எங்களுக்கு பத்தாண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. இந்திய சைவ உணவு வகைகளை உயர்தரமாக தயாரிக்கவும், விரைவான சேவைக்காகவும் மரியாதை பெற்ற, நம்பகமானதொரு நிறுவனமாக எங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம். ஒரு முன்னணி உணவகமாக, சமூகத்திற்கு எங்களது நன்றிக் கடனை செலுத்த உறுதியெடுத்துள்ளோம். அதே நேரத்தில் எங்கள் தொழில்துறைக்கு திறன்வாய்ந்த எதிர்கால நிபுணர்களைப் பெறுவதற்கான திட்டத்தையும் உருவாக்கி வருகிறோம். இந்த இணைவு வெற்றிகரமாகச் செயல்படும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, விருந்தோம்பல் துறையில் பாடம் – தொழில் நடைமுறைகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், தொழில்துறை – பயிற்சி நிறுவனக் கூட்டுச் செயல்பாடு மாதிரி அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு விரிவுரைகள், ஆலோசனை அமர்வுகள், தொழில் முன்னேற்றம் சார்ந்த உரைகளை வழங்குவதற்கு துறை சார் நிபுணர்களாக ஜி.வி.ஆர். ஃபுட்ஸின் அனுபவம் வாய்ந்த சமையல் நிபுணர்கள், சமையலறை, சேவை ஊழியர்கள் டபிள்யூ.ஜி.எஸ்.எச்.ஏ.-வில் பங்கேற்க இது வழிவகை செய்கிறது. தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பணியிடப் பயிற்சி, வேலை வாய்ப்புகளை வழங்கும் வளாக நேர்காணல்களையும் ஜி.வி.ஆர். ஃபுட்ஸ் நடத்தும்.

இது குறித்து திரு. திருஞானசம்பந்தம் கூறுகையில், “ஜி.வி.ஆர். ஃபுட்ஸ் உடன் இணைந்து செயல்படக் கிடைத்துள்ள வாய்ப்புக்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக் கூட்டணியை மிகவும் உற்சாகமாக உணர்கிறோம். கீதம் வெஜ் சைவ உணவு வகைகளுக்கு பிரபலமானது, எங்களது மாணவர்களுக்கோ இது ஒரு சிறந்த கற்றல் வாய்ப்பாக இருக்கும். வருங்கால விருந்தோம்பல் நிபுணர்களுக்கு இந்திய உணவு வகைகளைப் பற்றிய ஆழமான அறிவை வழங்குவதில் இது ஒரு முக்கிய படிநிலையாக இருக்கும். இந்திய உணவு வகைகளில் முதுகலை பட்டப்படிப்பை வழங்குவதில் எங்களது நிறுவனம் முதன்மையானது ஆகும். எங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தொழில்துறையை சேர்ந்த தகுதியான நிபுணர்களைப் பெறுவதன் மூலம் இந்திய உணவு வகைகளை உலகளாவிய வரைபடத்துக்குக் கொண்டு சேர்ப்பதே எங்கள் அடிப்படை நோக்கம். இந்த வகையான தொழில்துறை – கல்வித்துறை இணைந்த செயல்பாடு, கீதத்தில் உள்ள மாஸ்டர் செஃப்களிடமிருந்து ஏராளமான நிபுணத்துவத்தைப் பெற எங்கள் மாணவர்களுக்கு உதவும். கீதத்தில் கிடைக்கும் பணியிடப் பயிற்சி, புத்தாக்கப் பயிற்சியின் அடிப்படையில் எங்கள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உத்வேகம் பெற சிறந்ததொரு வழியாகும்.

பெருந்தொற்றுக்குப் பின் பயணம், சுற்றுலாத் துறை ஆகியவை செயல்படும் முறை, தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்திருப்பது ஆகியவற்றின் அடிப்படையில் அதிரடி மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இன்றைய பயணிகள் தனித்துவ அனுபவங்களை தரும் ஃபைன்-டைன் (fine-dine) உடன், கேஷூவல் டைனிங் ரெஸ்டாரன்ட்களையும் (casual dining restaurants) எதிர்பார்க்கிறார்கள். இந்தக் கூட்டணி எங்களது மாணவர்களுக்கு எல்லையை விரிவுபடுத்த உதவுவதோடு, விருந்தோம்பல் துறையில் காலத்தின் தேவையாக இருக்கும் புத்தாக்கம், புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்கும்.

சுற்றுலா அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வின்படி, சைவ உணவு வகைகளை நன்கு அறிந்த சமையல் கலைஞர்கள் இந்தத் தொழிலுக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள். ஜி.வி.ஆர். ஃபுட்ஸ் உடனான இந்தக் கூட்டு செயல்பாட்டுடன் நிச்சயமாக நாங்கள் முன்னேறிச் செல்வோம். இந்தியாவின் நுணுக்கமான உணவு வகைகளை ஆழமாக ஆராய்ந்து, பாடத்திட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் ஒரு முன்னணி விருந்தோம்பல் நிறுவனமாக இதை வலுப்படுத்த முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.

இந்தக் கூட்டு செயல்பாடின் ஒரு பகுதியாக, டபிள்யூ.ஜி.எஸ்.எச்.ஏ.-வில் ஜி.வி.ஆர். கார்னர் என ஒரு பகுதி நிறுவப்படும். அங்கு ஜி.வி.ஆர். ஃபுட்ஸ் தொடர்பான அனைத்து தகவல் தொடர்புகள், தகவல்கள், சிறப்பம்சங்கள், வெற்றிக் கதைகள், நிகழ்ச்சிகள், சாதனைகளை வெளியிட பிரத்யேக அறிவிப்புப் பலகை இருக்கும். அத்துடன் நிறுவன செய்தி மடல், பத்திரிகைகள் வழியே ஜி.வி.ஆர். ஃபுட்ஸ் நிபுணர்களின் கருத்துகள் பகிரப்படும்.