ஒரே நேரத்தில் 5,000 போன்களை சார்ஜ் செய்யக்கூடிய பவர் பேங்கை உருவாக்கிய நபர்!

0
142

ஒரே நேரத்தில் 5,000 போன்களை சார்ஜ் செய்யக்கூடிய பவர் பேங்கை உருவாக்கிய நபர்!

பெய்ஜிங்: தற்போது அனைவரும் கூடுதல் பேட்டரிக்காக பவர் பேங்கை பயன்படுத்தி வருகிறோம், பயணத்தின் போது நம் சாதனங்களில் மின்சாரம் இல்லாமல் போனால் அல்லது மின்சாரம் இல்லாத நேரத்தில் பவர் பேங்க் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. பவர் பேங்க்கள் தற்போது சில ஆயிரம் மில்லியம்பியர் மணிநேரங்களுக்கு (mAh) மட்டும் செயல்படும் திறனைக் கொண்டுள்ளன.

இந்நிலையில் ஹேண்டி கெங் என்று அழைக்கப்படும் வெல்டிங் கைவினை கலைஞர், தனது அனைத்து நண்பர்களிடமும் தன்னை விட பெரிய பவர் பேங்க்கள் இருப்பதைப் பார்த்த பிறகு, இந்த போர்ட்டபிள் பவர் பேங்கை உருவாக்கும் யோசனை வந்துள்ளது.

அவர் தனது வெல்டிங் திறன்களை பயன்படுத்தி, ஒரு உலோக சட்டத்தை உருவாக்கினார், அதே போல் ஒரு துருப்பிடிக்காத எஃகு தாளை வெளிப்புறத்தில் பயன்படுத்தி உள்ளே நடுத்தர அளவிலான மின்சார காரை இயக்கும் திறன் கொண்ட பேட்டரி கொண்டு 5.9 அடிக்கு 3.9 அடிக்கு 0.98 அடி என்ற பவர் பேங்கை உருவக்கியுள்ளார். இது ஒரு எம்ஐ பவர் பேங்க் போல தோற்றமளிக்கிறது.

இந்த பவர் பேங்கில் மின்சார சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான 60 பவர் சாக்கெட்டுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த பவர் பேங்கை பயன்படுத்தி டிவி, மின்சார குக்கர், துணி துவைக்கும் இயந்திரம் போன்றவற்றை இயக்கும் திறனை இந்த பவர் பேங்க் கொண்டுள்ளது. மேலும் இதனை வேறு இடங்களுக்கு எடுத்து செல்ல சக்கரங்களுடன் கயிறு ஒன்று இணைக்கபட்டுள்ளது.