உபயோகப்படுத்திய எண்ணெயை Bio-diesel ஆக மாற்றும் திட்டம் ( RUCO – REPURPOSE USED COOKING OIL)

0
165

உபயோகப்படுத்திய எண்ணெயை Bio-diesel ஆக மாற்றும் திட்டம் ( RUCO – REPURPOSE USED COOKING OIL)

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, சென்னை மாவட்டம்.

சென்னை ஆகஸ்டு 2021 RUCO (REPURPOSE USED COOKING OIL) சமையலுக்கு உபயோகப்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் வறுக்கும் போது Total Polar Compunds பயன்படுத்தும் மனித நுகர்வுக்கு 25% மேலாக உள்ள Total Polar Compunds பயன்படுத்தும் போது பாதுகாப்பற்றதாக மாறிவிடுகிறது.

பலமுறை உபயோகப்படுத்திய எண்ணெயினை பயன்படுத்தும்போது எண்ணெயில் உள்ள ஊட்டசத்து உள்ளிட்ட பண்புகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும் ஆபாயம் உள்ளது. குறிப்பாக புற்றுநோய், இதயபாதிப்பு, நெஞ்சு எரிச்சல், உயர் இரத்த அழுத்தம், உடன் பருமன், ஞாபகமறதி, கொழுப்பு மற்றும் கல்லீரல் சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்பட முக்கிய காரணமாகிவிடுகிறது. இதை தவிற்கும் பொருட்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை (FSSAI) மற்றும் பெட்ரோலியம் துறை இணைந்து உபயோகப்படுத்திய எண்ணெயை Bio-diesel ஆக மாற்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே நாடு முழுவதும் களளயi-ல் அங்கிகரிக்கப்பட்ட 33 Bio-Diesel தயாரிப்பாளர்கள் மற்றும் 19 அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயன்படுத்திய எண்ணெய் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் பயன்படுத்திய எண்ணெயை வாங்க அங்கிகரிக்கப்பட்ட நிறுவனமான ENVOGREEN ENERGY, நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 50 லிட்டர்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் அனைத்து உணவகங்கள், இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் கடைகள் மற்றும் துரித உணவகங்கள் ஆகியவைகளில் பயன்படுத்திய சமையல் எண்ணெய்களை மறுமுறை உபயோகப்படுத்தாமல் மறுசுழற்சிக்கு சென்னை மாவட்டத்திலுள்ள உணவகங்கள், இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் உரிமையாளர் மூலமாக பயன்படுத்திய எண்ணெயை அளிக்கப்பட்டு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். து.விஜெய ராணி அவர்களால் பயன்படுத்திய எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது. இது குறித்த விழிப்புணர்வு சென்னையில் நான்கு இடங்களில் 1. தி.நகர் 2. புல்லா அவென்யு, அண்ணாநகர் 3. Pheonix Maha; Velachery மற்றும் 4. பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் லயோலா கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சியுடன் நடத்தப்பட்டது.

உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமிக்கப்பட்ட அனுவலர் டாக்டர். P.சதீ~; குமார், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், திரு.சந்திரசேகர் வணிகத் தலைவர், தனலட்சுமி கெமிக்கல் இண்டஸ்டிரீஸ் லிமிடெட், திரு.செங்கதீர்பாலு, நிறுவனர் என்வோகிரீன் எனர்ஜி மற்றும் மாவட்ட, நகர ஓட்டல் உரிமையாளர் சங்க நீர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.