ஆலியா எச் ஜாரிவாலா தினசரி ஜோதிட ப்ளூமிங் கார்டுகள் எனும் ஏஞ்சல் கார்டுகளை சீஷெல்ஸ் கெளரவத் தூதர் எம்.எஸ்.சாய், ஸ்ரீதேவி அருணாசலம், வித்யா கஜபதி ராஜு சிங் & நீரஜா மாலிக் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்

0
215
ஆலியா எச் ஜாரிவாலா தினசரி ஜோதிட ப்ளூமிங் கார்டுகள் எனும் ஏஞ்சல் கார்டுகளை சீஷெல்ஸ் கெளரவத் தூதர் எம்.எஸ்.சாய், ஸ்ரீதேவி அருணாசலம், வித்யா கஜபதி ராஜு சிங் & நீரஜா மாலிக் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

சென்னையில் உள்ள நோவோட்டல் விடுதியில் ஆலியா எச். ஜாரிவாலாவின் “ப்ளூமிங்க் ஏஞ்சல்ஸ்” பிரமாண்ட வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஷீசெல்ஸ் குடியரசின் கவுரவ கவுன்சில் ஜெனரல் எம்.எஸ்.சாய், இந்தோ – ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார வர்த்தக சபையின் நிறுவன தலைவர் ஸ்ரீதேவி அருணாசலம், பாடகர் க்ரிஷ் , புற்று நோய் ஆலோசகர் நீரஜா மாலிக், விஜயநகர இளவரசி வித்யா கஜபதி ராஜு சிங் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

ப்ளூமிங் ஏஞ்சல்ஸ் என்பது தினசரி வழிகாட்டுதல்,  மற்றும் நேர்மறை எண்ணங்களை வழங்கும் 33 கார்டுகளை கொண்ட ஏஞ்ஜல் டெக் கார்டுகள் ஆகும்.

2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது, ஆலியா தனது மகளுடன் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்றிருந்த போது, அங்கிருந்த குழந்தைகளின் முகங்கள் இந்த ப்ளூமிங் ஏஞ்சல்ஸ் என்ற பெயர் உருவாக காரணமாக அமைந்தது.

மேலும்  SayHeyKey எனும் ஆன்மீக  இணையதளத்தின் நிறுவனரான ஷ்ரதா ஏ ஜெயின் என்பவரால் இது வடிவமைக்கப்பட்டது.

2004 இல் உருவாக்கப்பட்ட  ஆலியா ஏஞ்சல்ஸ் இன் நிறுவனரும் புகழ்பெற்ற ஹீலருமான ஆலியா எச் ஜாரிவாலா இந்த ப்ளூமிங் ஏஞ்சல்ஸ் எனும் எதிர்கால வளமையைக் கணிக்கும் ஏஞ்சல் டெக் ஐ உருவாக்கியுள்ளார்.

குழந்தைப் பருவத்தில் இருந்தே தெய்வீக ஆற்றல் பெற்றிருந்த ஆலியா, ஹீலிங்கில் பல்வேறு முறைகளை திறம்பட கையாள்பவர்.  கால்டியன் நியூமராலஜி, மெழுகுவர்த்தி சிகிச்சை ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர். இரண்டு தலைமுறைகளாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு  சேவையாற்றி வரும் இவர், தனது சிறு வயதிலேயே தனது ஆன்மீக பயணத்தை தொடங்கியவர்.  கடந்த 18 ஆண்டுகளாக  தன்னை சுற்றி உள்ளவர்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆலியா ஜாரிவாலா, சர்வதேச அளவில் தனது திறமைகளை பலருக்கும் கற்பித்து வருவதோடு, படிக  பொருட்களாலான நகைகள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

Aaliiyaa Angels, Block 12, Flat A2, Jains Green Acres Apartment, Zamin Pallavaram, Chennai – 600043, (Phone Number: +91 9962994249), Contact Details: [email protected]