அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்  25லட்சம் மதிப்பிலான இலவச செயற்கை கால் வழங்குதல் நிகழ்ச்சியை சுகாதாரத்துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன் மெட்ராஸ் நைட்ஸ் ரவுண்ட் டேபிள் 181 தலைவர் சுனில் பஜாஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

0
176

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்  25லட்சம் மதிப்பிலான இலவச செயற்கை கால் வழங்குதல் நிகழ்ச்சியை சுகாதாரத்துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன் மெட்ராஸ் நைட்ஸ் ரவுண்ட் டேபிள் 181 தலைவர் சுனில் பஜாஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்  25 லட்சம் ரூபாய்  மதிப்பிலான இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் மா சுப்பிரமணியன் மெட்ராஸ் நைட்ஸ் ரவுண்ட் டேபிள் 181 தலைவர் சுனில் பஜாஜ், கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவக் கல்லூரி முதல்வர்  டாக்டர் சாந்திமலர் ஆகியோர் கலந்து கொண்டு  தொடங்கி வைத்தனர்.
 மார்ச் 22 மற்றும் மார்ச் 23 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதுமிருந்து சுமார் 81க்கும்  மேற்பட்ட மாற்றுத்திறனாளி  பயனாளிகளுக்கு இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பயனாளிகளுக்கு இலவச செயற்கை கால்களை  மெட்ராஸ் நைட்ஸ் ரவுண்ட் டேபிள் 181 மற்றும் கோயம்புத்தூர் சிட்டி ரவுண்ட் டேபிள் 31  அமைப்புகள் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையுடன் இணைந்து  25 லட்சம் மதிப்பிலான இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது  குறிப்பிடத்தக்கது.
 நிகழ்ச்சியின்போது பேசிய சுனில் பஜாஜ் இம்முகாமில் 81க்கும் மேற்பட்ட பயனாளிகள் தமிழகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்டு அளவீடுகளை மேற்கொண்டனர். தேவையான தகுதி உள்ள அனைத்து பயனர்களுக்கும் செயற்கை உறுப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது  எனக் கூறினார்.