அப்போலோ மருத்துவமனை, துருக்கி நிலநடுக்கத்தையடுத்து, தொலைதூரத்தில் இருந்து நோயாளிகளைக் கண்காணிக்கவல்ல 1000 ரிமோட் மானிடரிங் பேட்ச்களை நன்கொடையாக வழங்குவதற்காக லைஃப்சைன்ஸ் உடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறது!

0
193

அப்போலோ மருத்துவமனை, துருக்கி நிலநடுக்கத்தையடுத்து, தொலைதூரத்தில் இருந்து நோயாளிகளைக் கண்காணிக்கவல்ல 1000 ரிமோட் மானிடரிங் பேட்ச்களை நன்கொடையாக வழங்குவதற்காக லைஃப்சைன்ஸ் உடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறது!

 சென்னை, சமீபத்தில் துருக்கியில் நிகழ்ந்த பேரழிவில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர்; பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். அவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்டெடுக்கும் செயல்பாடுகள் முடிவடைந்தபோதும், அவர்களது புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகள் தற்போதுதான் தொடங்கியுள்ளது. பல மருத்துவமனைகள் சிதிலமடைந்துள்ளன; மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் போதுமான வசதிகள் இல்லாமல் உள்ளனர்.

இந்த இக்கட்டான காலத்தில் அந்நாட்டுக்கு உதவும் வகையில், லைஃப்சைன்ஸ் (LifeSigns) உடன் கூட்டு சேர்ந்து 1,000 தொலைதூர நோயாளிக் கண்காணிப்பு பிளாஸ்திரிகளான ரிமோட் மானிடரிங் பேட்ச்களை (remote patient monitoring patches) நன்கொடையாக வழங்குகிறது அப்போலோ ஹாஸ்பிடல்ஸ். இதயத் துடிப்பு உட்பட நோயாளியின் மிக முக்கியமான அம்சங்களையும், நெருக்கமாக இருந்து கவனித்தக்க அறிகுறிகளையும் தெரிந்துகொள்ள இந்த பிளாஸ்திரிகளைப் பயன்படுத்தலாம். ஒரு நோயாளியின் இதயத் துடிப்பு விகிதம், இசிஜி ரிதம், மூச்சுவிடும் விகிதம், வெப்பநிலை, உடல் நிலைமையை (heart rate, ECG rhythm, respiratory rate, temperature, & position) நம்பகத்தன்மையுடன் அறிய மருத்துவர்களுக்கு இவை உதவும்; ஆக்சிஜன் செறிவு கண்காணிப்பு சாதனங்களுடனும் (oxygen saturation monitoring devices) இவற்றை இணைத்துப் பயன்படுத்த முடியும்.  இது, மிகக்கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு தீவிரப் பராமரிப்பு கிடைக்க உதவும்; மருத்துவமனைக்கு வெளியே அரவணைப்பைப் பெற விரும்புபவர்கள் அல்லது களத்தில் பணியாற்றுபவர்கள் இந்த பிளாஸ்திரிகளை பயன்படுத்த முடியும்.

நோயாளிகள் தங்களது வழக்கமான அக்கறையைக் காட்டாதபோதும், மருந்துகளை உட்கொள்ளாதபோதும், தங்களது நஷ்டங்களால் கடுமையான அழுத்தங்களுக்கு ஆளாகும்போதும், முக்கியமான அறிகுறிகளைச் சரியான நேரத்தில் கண்காணித்து அறிவது மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்க்க அவசியமாகும்.

இது பற்றி அப்போலோ ஹாஸ்பிடல்ஸை சார்ந்த டாக்டர் சாய் பிரவீன் ஹரநாத் (Dr Sai Praveen Haranath, Apollo Hospitals) பேசுகையில்,  “இந்த இக்கட்டான நேரத்தில் துருக்கி நாட்டுக்கு உதவ அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் தயாராக உள்ளது; நோயாளிகளைக் கவனிக்க உதவக்கூடிய துணை நிபுணத்துவக் குழுக்கள் மற்றும் எங்களது தீவிரப் பராமரிப்பு பிரிவிலிருந்து கிடைக்கக்கூடிய மருத்துவ உதவிகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் இதனைச் செயல்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

இந்த பிளாஸ்திரிகளை நன்கொடையாக வழங்கிய லைஃப்சைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் திரு. ஹரி சுப்பிரமணியம் (CEO of LifeSigns, Mr Hari Subramaniam), தற்போதைய சூழலில் இந்த சாதனத்தின் தேவையைப் பற்றித் தன் பேச்சில் குறிப்பிட்டார். “ஒரு நிறுவனமாக, முக்கியமான நோய் அறிகுறிகளை எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் அறிய முடியுமென்பதை எப்போதும் நம்புகிறோம்; தீங்கைத் தடுத்து குணப்படுத்தலை ஊக்குவிப்பதற்கான முக்கிய முடிவுகளை மேற்கொள்ள எங்களது சாதனங்கள் மருத்துவர்களுக்கு உதவும்” என்று தெரிவித்தார்.

துருக்கி மருத்துவச் சங்கத்தின் மத்திய கவுன்சில் பொதுச் செயலாளர் பேராசிரியர் வெடாட் புளுட் (The Turkish Medical Association Central Council General Secretary Prof. Vedat Bulut) பேசுகையில், “துருக்கி மருத்துவச் சங்கத்தின் சார்பாக, அப்போலோ மருத்துவக் குழுமத்தின் ஒருங்கிணைப்புக்கும் மனிதாபிமானமிக்க மருத்துவ உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பேரழிவு நிகழ்ந்த பகுதிகளில் லாஜிஸ்டிக் மையமாகச் செயல்படுகிறது அடானா மெடிக்கல் சேம்பர். அடானாவில் இருந்து இதர நகரங்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் விநியோகிக்கப்படுகின்றன. குறிப்பாக, மிகமோசமாகச் சேதமடைந்த நான்கு நகரங்களில் மருத்துவ அமைப்புகளின் கட்டடங்கள் கூடச் சிதிலமடைந்துள்ளன” என்று தெரிவித்தார்.

அடானா மெடிக்கல் சேம்பர் தலைவரும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணருமான டாக்டர் செலஹட்டின் மெண்டெஸ் (Dr Selahattin Menteş, Radiation Oncology Specialist, and President of Adana Medical Chamber) பேசுகையில்,  “11 மாகாணங்களைச் சேர்ந்த 15 மில்லியன் மக்களைப் பாதித்த இந்த நிலநடுக்கத்தின்போது சர்வதேச சமூகம் காட்டிய அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

பேரழிவினால் விளைந்த சிதைவுகள் தொடர்பான பல பிரச்சனைகளோடு ஏற்கனவே போராடி வரும் சூழலில், துருக்கியில் இடைவிடாது பணியாற்றிவரும் மருத்துவர்களின் மிகக்கடுமையான ஒருங்கிணைப்போடும் பல நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்களின் சர்வதேச நெட்வொர்க் மூலமாகவும் இந்த முயற்சி சாத்தியமாகியுள்ளது.

சாதனங்களை நன்கொடையாக வழங்குவதும், அதில் நிபுணத்துவம் பெற்றிருப்பதும் இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையே ஒரு மருத்துவப் பாலத்தைக் கட்டமைக்கவும் துன்பத்தைத் தணிக்கவும் உதவுமென்று நம்புகிறோம்.