விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் அவர்கள் 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினார்!

0
127

விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் அவர்கள் 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினார்!

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் அவர்கள் 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினார்.

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் தலைவர் மரிய ஜான்சன், துணைத்தலைவர்கள் மரியா பெர்னாடெட்டி அருட்செல்வன் மற்றும் ஜோ.அருட்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ. ISRO) ஏ.ராஜராஜன்,  அக்னி ஏவுகணை விஞ்ஞானி ஜி.ராமகாரு, கெரி இன்டெவ் லாஜிஸ்டிக் நிறுவனத் தலைவர் சேவியர் பிரிட்டோ, சூர்யா மருத்துவமனை இருதய நிபுணர் எம்.ஜெயராஜா, இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர்க்கு பல்கலைகழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் கௌரவப் பட்டம் வழங்கினார்.

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2892 மாணவர்களுக்கு இளங்கலை பட்டங்களும், 386 பேருக்கு மேல்நிலை பட்டங்கள், பார்மசி துறையில் 10 டிப்ளமோ, 144 பிஎச்டி பட்டம்,24 பேருக்கு சாதனை தங்க பதக்கம்  உள்ளிட்டவைகளை சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் ஏ.ராஜராஜன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் மாணவர்களிடையே பேசிய சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் ஏ.ராஜராஜன் :- தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம். பல தோல்விகளே பல சாதனைகளை புரிந்துள்ளது.

தோல்வியடையும் போதுதான் நாம் வெற்றியை நோக்கி சிந்திக்க வேண்டும். இளம் தலைமுறைகளான நீங்கள் புது புது சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என மாணவர்களிடையே பேசினார்.

2020-021ம் ஆண்டில் 257 கம்பெனிகளில் மொத்த மாணவர்களில் 91.60% மாணவர் வேலைவாய்ப்பு பெற்றனர். இவர்கள் ரூபாய் 4.75 கோடி ஆண்டு சம்பளம் முதல் ரூபாய் 27 லட்சம் வரை பெறுகின்றனர். அமேசான், ஆரகிள், மைக்ரோசாஃப்ட், சீமன்ஸ் காக்னிசன்ட், கேப்ஜெமினி, டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களில் இப்பல்கலைகழக மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என பல்கலைகழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் தெரிவித்தார்.

போட்டோ : சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் மாணவிக்கு பட்டம் வழங்கினார். உடன் பல்கலைகழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன், தலைவர் மரிய ஜான்சன், துணைதலைவர்கள் மரிய பெர்னாடெட்டி அருட்செல்வன், ஜோ.அருட்செல்வன் ஆகியோர் இருந்தனர்