வரும் புதன்கிழமை அன்று முழு சந்திர கிரகணம்: இந்தியாவின் பெரும்பாலான வடகிழக்குப் பகுதிகளில் பகுதி கிரகணமாகக் காணலாம்

0
373

வரும் புதன்கிழமை அன்று முழு சந்திர கிரகணம்: இந்தியாவின் பெரும்பாலான வடகிழக்குப் பகுதிகளில் பகுதி கிரகணமாகக் காணலாம்

Chennai:

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதாவது:

வரும் புதன் கிழமை, மே 26 அன்று வானில் முழு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.

இந்தியாவில் வட கிழக்கு பகுதிகள்‌(சிக்கிம் தவிர்த்து), மேற்கு வங்கத்தின் ஒரு சில இடங்கள், ஒடிசா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சில கடற்கரைப் பகுதிகளில் சந்திர உதயத்திற்குப் பிறகு, பகுதி சந்திரகிரகணம், குறுகிய காலத்திற்கு தெரியும்.

தென் அமெரிக்கா, வட  அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடலை ஒட்டிய இடங்களில் இந்த சந்திர கிரகணம் தெரியும்.

இந்த பகுதி சந்திர கிரகணம், இந்திய நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்குத் தொடங்கும். முழு சந்திர கிரகணம், மாலை 4:39 மணிக்குத் துவங்கி, 4:58 மணிக்கு நிறைவடையும். பகுதி சந்திர கிரகணம், மாலை 6:23 மணிக்கு முடிவடையும்.

அடுத்த சந்திர கிரகணம், 2021, நவம்பர் 19 அன்று இந்தியாவில் தெரியும். அது, பகுதி சந்திர கிரகணமாக நிகழும்.

DURATION OF PARTIAL PHASE OF THE ECLIPSE VISIBLE FROM SOME OF THE PLACES OF INDIA ON MAY 26

PLACES Moon Rise time       ( IST) Duration of ending of the partial phase will be visible after moonrise
h   m in Minutes
Agartala 18  06 17
Aizawl 17  59 24
Kolkata 18  15 08
Cherrapunji 18  06 17
Cooch Behar 18 18 05
DiamondHarbour 18  15 08
Digha 18  16 07
Guwahati 18  09 14
Imphal 17  56 27
Itanagar 18  02 21
Kohima 17  57 26
Lumding 18  01 22
Malda 18 21 02
North Lakhimpur 18  00 23
Paradeep 18  18 05
Pashighat 17 57 26
Port Blair 17 38 45
Puri 18  21 02
Shillong 18  06 17
Sibsagar 17  58 25
Silchar 18  01 22