ரோட்டரி மெட்ராஸ் சவுத்வெஸ்ட் கிளப் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஆளுமைகளுக்கு சாரியட் விருதுகளை  முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே. கண்ணன் வழங்கினார்

0
160
ரோட்டரி மெட்ராஸ் சவுத்வெஸ்ட் கிளப் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஆளுமைகளுக்கு சாரியட் விருதுகளை  முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே. கண்ணன் வழங்கினார்.
எழும்பூரில் உள்ள ராடிசன் ப்ளூ விடுதியில் ரோட்டாரி மெட்ராஸ் சவுத்வெஸ்ட் சார்பில் சாரியட்  விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முதன்மை விருந்தினராக பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. கண்ணன் கலந்து கொண்டார்.
இந்த ஆண்டு சாரியட் விருதுகள் 2023க்கு 5 ஆளுமைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.  மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சுவிற்கு கவுரவ விருது வழங்கப்பட்டது. பிரின்ஸ் ஜூவல்லரியின் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான பிரின்ஸ்சன் ஜோஸ்க்கு தொழில்சார் சிறப்பு விருதும், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் பட்டாபிராமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், நீச்சல் வீரர் ஸ்ரீராம் ஸ்ரீனிவாசுக்கு இளைஞர் பிரிவில் விளையாட்டு விருதும் பெற்றனர். கர்நாடக இசைக்கலைஞரான காயத்ரி விபாவரி வியாகரனம் இளைஞர் பிரிவில் கலைக்கான  விருது பெற்றார்.