ரூபாரு மிஸ்டர் இந்தியா 2022 போட்டியில் சென்னையை சேர்ந்த ஸ்ரீலோகானந்த் மிஸ்டர் சவுத் இந்தியா பட்டத்தை கைப்பற்றினார்

0
162

ரூபாரு மிஸ்டர் இந்தியா 2022 போட்டியில் சென்னையை சேர்ந்த ஸ்ரீலோகானந்த் மிஸ்டர் சவுத் இந்தியா பட்டத்தை கைப்பற்றினார்

ரூபாரு மிஸ்டர் இந்தியா 18வது பதிப்பின் இறுதிப் போட்டி  சென்னையில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதியில் நடந்தது.
இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் 36 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
5 நாட்கள் நடைபெற்ற பாரம்பரிய, அலுவல் மற்றும் நீச்சலுடை பிரிவுகளில் இவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீலோகானந்த் தேர்ச்சி பெற்று,  நேர்காணலில் கலந்து கொண்டார்.  தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் தேசிய அளவிலான ரூபாரு மிஸ்டர் இந்தியா போட்டியில் பங்கேற்றனர்.
இதில் ஸ்ரீலோகானந்த் ரூபாரு மிஸ்டர் சவுத் இந்தியா 2022 பட்டத்தை கைப்பற்றினார்.
சென்னையை சேர்ந்த  முன்னாள் ரூபாரு மிஸ்டர் இந்தியா 2021 பட்டம்  வென்றவரான கோபிநாத் ரவியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்பிடி இந்த பட்டத்தை வென்றதாக ஸ்ரீலோகானந்த் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி “சிறந்த உடையலங்காரம் 2022” என்ற பட்டத்தையும் ஸ்ரீலோகனந்த் தட்டி சென்றார். எதிர்வரும் சர்வதேச ஆணழகன் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஸ்ரீ லோகனந்த் கலந்து கொள்ள உள்ளார்.