ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் இணைந்து, பொன்னேரி பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 வீடுகள் வழங்கினர்

0
168

ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் இணைந்து, பொன்னேரி பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 வீடுகள் வழங்கினர்

ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து, பொன்னேரி செஞ்சமான் நகர் கிராம மக்களுக்கு இதயநோய் உள்ளிட்ட இலவச அதிநவீன சுகாதார பரிசோதனை முகாம் நடத்தியதோடு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 குடும்பங்களுக்கு வீடுகளையும் கட்டி கொடுத்துள்ளன.

ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் தொடர்ந்து சமூக சேவைகளை செய்து வருகின்றன. அந்த வகையில், SPC அறக்கட்டளையுடன் இணைந்து, கடந்த 3 ஆண்டுகளாக பொன்னேரி செஞ்சமான் நகர் பகுதியில் வீடற்ற மக்களுக்காக வீடுகள் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற விழாவில், ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் சார்பில், அப்பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 வீடுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, அப்பகுதி மீனவ சமுதாய மக்களின் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில், அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அதற்கான சரியான சிகிச்சையைப் பெற உதவும் வகையில் இலவச சுகாதார பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து, இந்த சுகாதார பரிசோதனை முகாமை நடத்தின. இதில், அப்போலோ மருத்துவமனையின் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம், இதயநோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பான அதிநவீன பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் இலவச பரிசோதனை செய்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகில், ரவுண்ட் டேபிள் இந்தியாவின் பகுதி 2 தலைவர் சந்தோஷ் ராஜ் மற்றும் மன்பிரீத் பாசின் ஆகியோர் கலந்து கொண்டு, பயனாளர்களுக்கு வீடுகளை வழங்கி, பரிசோதனை முகாமை தொடக்கி வைத்தனர். மேலும் இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும், ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.