ரஜத் வர்மா மார்ச் 2025-ல் டிபிஎஸ் வங்கியின் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்கிறார்
தற்போது டிபிஎஸ் இந்தியா வங்கியில், இன்ஸ்டிடியூஷனல் பேங்கிங் க்ரூப் பிரிவின் தலைமை நிர்வாகியாக [Head of Institutional Banking Group] இருக்கும் ரஜத் வர்மா, அடுத்த பிப்ரவரியில் ஓய்வுபெறும் சுரோஜித் ஷோமுக்குப் [Surojit Shome] பிறகு பதவியேற்க இருக்கிறார்.
சிங்கப்பூர், சென்னை, 31 டிசம்பர் 2024: இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்படி, திரு. ரஜத் வர்மாவை டிபிஎஸ் இந்தியா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) நியமிக்க இருப்பதாக டிபிஎஸ் வங்கி அறிவித்திருக்கிறது. இவரது நியமனம் 1 மார்ச் 2025 முதல் அமலுக்கு வருகிறது. இவ்வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் திரு. சுரோஜித் ஷோம் 28 பிப்ரவரி 2025 அன்று ஓய்வுபெறுகிறார். இதையடுத்து டிபிஎஸ் இந்தியா வங்கியின் தற்போதைய இன்ஸ்டிடியூஷனல் பேங்கிங் க்ரூப் பிரிவின் (Institutional Banking Group (IBG)) தலைமை நிர்வாகியாக செயல்பட்டு வரும் திரு. ரஜத் வர்மா, தலைமை செயல் அதிகாரியாக [Chief Executive Officer (CEO)] பொறுப்பேற்க இருக்கிறார்.
2015-ல் டிபிஎஸ் இந்தியா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதிலிருந்து, திரு. ஷோம் இந்தியாவில் டிபிஎஸ் வங்கியின் கிளை செயல்பாடுகளை சிறப்பான முறையில் விரிவுபடுத்தியுள்ளார். 2016-ம் ஆண்டில் மொபைல் போன் மூலமாக மட்டுமே இயங்கும் [India’s first mobile-only bank] இந்தியாவின் முதல் வங்கியாக டிஜிபேங்க் [digibank]-ஐ டிபிஎஸ் இந்தியா வங்கி அறிமுகப்படுத்தியது. 2019-ல் இந்தியாவில் டிபிஎஸ் வங்கியின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியை [subsidiarisation] முன்னெடுத்தார். இதன் தொடர்ச்சியாக 2020 -ல் லக்ஷ்மி விலாஸ் வங்கி டிபிஎஸ் இந்தியா வங்கியுடன் இணைந்து தனது செயல்படத் தொடங்கியது. இன்று 19 மாநிலங்களில் 350-க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும், 2020 முதல் 2022 வரை இந்தியாவில் உள்ள உலகின் சிறந்த வங்கிகளின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் [Forbes’ list of the World’s Best Banks in India from 2020 to 2022.], முதல் மூன்று இடங்களுக்குள் இடம் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட கால ஆழ்ந்த அனுபவமிக்க ஒரு வங்கியாளராக திகழும் திரு. ரஜத் வர்மா, பரிவர்த்தனை வங்கி, நிதி நிறுவனங்கள், நிலையான நிதி, மைக்ரோ மற்றம் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வங்கி மற்றும் கிளை வங்கி [transactional banking, financial institutions, sustainable finance, micro – SME banking, branch banking] உட்பட தனிநபர் வாடிக்கையாளர் மற்றும் பெருநிறுவன வங்கிப் பிரிவில் 27 ஆண்டு கால அனுபவம் உள்ளவர்.
ஜூன் 2023-ல் இன்ஸ்டிடியூஷனல் பேங்கிங் க்ரூப் தலைமை நிர்வாகியாக டிபிஎஸ் வங்கியில் சேர்ந்ததிலிருந்து, அவர் அனைத்து நிறுவன வாடிக்கையாளர் பிரிவுகளிலும் வங்கி வணிகத்தை சிறப்பாக வளர்ச்சிப் பெற செய்திருக்கிறார். தற்போதுள்ள பெருநிறுவன உறவுகளை மேலும் நெருங்கிய உறவாக மேம்படுத்துதல், புதிய வாடிக்கையாளர்களை தங்களது சேவைகளில் இணைப்பதை துரிதப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் அதிகமுள்ள அம்சங்களில் புதிய வாய்ப்புகளை அடையாளம் காணுதல் போன்றவற்றை முன்னெடுத்திருப்பதன் மூலம் இந்த வளர்ச்சியை எட்டியிருக்கிறது டிபிஎஸ் இந்தியா வங்கி.
இவரது தலைமையின் கீழ், 2024-ம் ஆண்டில் க்ளோபல் ஃபைனான்ஸ் [Global Finance] டிபிஎஸ் வங்கியை இந்தியாவில் நிலையான நிதிக்கான சிறந்த வங்கியாக [Best Bank for Sustainable Finance – India] அடையாள கண்டு அங்கீகரித்திருக்கிறது. இவர் டிபிஎஸ் வங்கியில் இணைந்து பணியாற்றுவதற்கு முன்பு, ஹெச்.எஸ்.பி.சி. இந்தியா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் வணிக வங்கி சேவைப் பிரிவின் தலைமை நிர்வாகியாக [Managing Director & Country Head of Commercial Banking, HSBC India.] பணியாற்றினார்.
டிபிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி திரு. பியூஷ் குப்தா [DBS CEO Piyush Gupta] கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா, டிபிஎஸ்ஸின் முக்கிய சந்தையாக இருந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக சுரோஜித்தின் தலைமையில், டிபிஎஸ் இந்தியா நிறுவன வங்கி, செல்வ பராமரிப்பு மற்றும் சில்லறை வர்த்தகம் [institutional banking, wealth, retail segments] என பல்வேறு பிரிவுகளில் ஒரு முழுமையான சேவை தளமாக வளர்ச்சிக் கண்டுள்ளது இன்று டிபிஎஸ் இந்தியா வங்கியை வலுவான கிளை செயல்பாடுகளுடன் வளர்ச்சியடைய செய்ததில், திரு. சுரோஜித் அவர்கள் கொண்டிருந்த உறுதிமிக்க தொலை நோக்குப் பார்வையும், அயாராது காட்டிய அர்ப்பணிப்பும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அதற்கு நாங்கள் அவருக்கு நன்றி கூறக் கடமைபட்டு இருக்கிறோம். 18 மாதங்களுக்கு முன்பு எங்களுடன் இணைந்ததில் இருந்து, ஆழ்ந்த நிபுணத்துவமுடன் கூடிய வங்கி அனுபவமுள்ள ரஜத், எங்களது இந்திய இன்ஸ்டிடியூஷனல் பேங்கிங் க்ரூப் வணிகத்தை வலுவான ஒன்றாக விரிவுப்படுத்தியிருக்கிறார். எங்களது வலிமைமிக்க செயல்பாட்டு தளத்துடன், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தொடர்ந்து பங்கேற்கும் வகையில் டிபிஎஸ் இந்தியா வங்கி அதற்குரிய உரிய இடத்தில் இயங்கி வருகிறது. மேலும் ரஜத் அவர்கள் தான் சாதித்த அம்சங்களை மேம்படுத்துவதோடு, எங்களது வணிக செயல்பாடுகளை அடுத்தக்கட்ட த்திற்கு அழைத்துச் செல்வார் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’’ என்றார்.