மேற்கொண்டுவரும் தற்போதைய தமிழ்நாடு முதலீடுகள் மூலம் தென் பிராந்தியத்தின் மீதான உறுதிப்பாட்டை டால்மியா பாரத் மீண்டும் உறுதிப்படுத்துகிறது
சிமெண்ட் துறையின் நிறுவனம் மேற்கொண்ட மாநில முதலீடுகள் ஏற்கனவே 4000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன
அனைத்து சில்லறை விற்பனை ‘டால்மியா சிமெண்ட்’ பிராண்டுகளின் மீதும் வாடிக்கையாளர் சலுகையை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
சென்னை, தமிழ்நாடு, மே 12, 2022: முன்னணி இந்திய சிமெண்ட் நிறுவனமும், டால்மியா பாரத் லிமிடெட்டின் துணை நிறுவனமுமான டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட், அதன் அனைத்து சில்லறை விற்பனை ‘டால்மியா சிமென்ட்’ பிராண்டுகளின் மீதும் வாடிக்கையாளர் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் (TN) மேற்கொண்டுள்ள மூலதன முதலீடுகள் மூலம் தென்னிந்திய பகுதியில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மூலம் இதுவரை கிட்டத்தட்ட 4000- வேலை வாய்ப்புகளை இந்நிருவனம் உருவாக்கியுள்ளது. சமீபத்தில் தமிழக அரசுடன் இணைந்து கையொப்பமிடப்பட்ட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) அடுத்த நான்கு ஆண்டுகளில் 2600 கோடி வரையிலான முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, டால்மியா சிமெண்ட் (பாரத்) தலா 2.0 MTPA அளவுள்ள இரண்டு புதுமையான கிரைண்டிங் அலகுகளை நிறுவும். இதற்கான முதலீட்டுக்கும் மேலாக, ஒரு பொறுப்புள்ள நிறுவனமாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் நிலைத்தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்த 22 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திறன் திட்டத்தையும் இந்நிறுவனம் நிறுவும்.. 2030க்குள் 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலத்தில் இருந்து அதிகரித்து வரும் தேவை போதுமான அளவு பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய, தற்போது தெற்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்களில் உள்ள 11000-க்கும் மேலான வலுவான டீலர் மற்றும் துணை டீலர் நெட்வொர்க்கைப் பயன்படுத்திக் கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், பாம்பன் பாலம் மற்றும் திருச்சி விமான நிலையம் போன்ற தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் குறிப்பிடத்தக்க திட்டங்களில் DCBL இன் பங்களிப்பை இத்திட்டம் உறுதி செய்யும்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்வதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த DBCL மூத்த நிர்வாக இயக்குநர் திரு. சஞ்சய் வாலி, “மாநிலத்தில் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்றத்தில் பங்கு வகிக்கும் வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். மாநிலத்தில் மேலும் முதலீடு செய்து, அதன் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கும் இவ்வேளையில், எங்களது முதலீடுகள் மற்றும் சமூக மாற்ற முயற்சிகள் மூலம் உருவாகும் வேலைவாய்ப்பு, ஒரு முற்போக்கான மற்றும் தன்னிறைவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.
டால்மியா சிமென்ட் (பாரத்) லிமிடெட் தென் பிராந்தியத்தில் அதன் வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனைத்து சில்லறை விற்பனை ‘டால்மியா சிமெண்ட்’ பிராண்டுகளுக்கும் பொருந்தும், வலிமை, நீடித்துழைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் ‘உங்கள் வீடு தயாராகும் முன்பே வீட்டிற்கான மகிழ்ச்சியைக் கொண்டுவாருங்கள்’ சிறப்பு டீல்களை வாடிக்கையாளர்கள் இப்போது பெறலாம்.
“தென்னிந்தியா முழுவதிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கள் கட்டிடத் தேவைகள் வணிக ரீதியாகவோ அல்லது தனிப்பட்டதாகவோ எதுவாக இருந்தாலும் அடித்தள வலிமையை மட்டும் உறுதி செய்யாது தலைமுறைகளுக்கு சுற்றுச்சூழலைத் தக்கவைக்க உதவும் கட்டுமானத் தீர்வுகளை அதிகளவில் தேர்வு செய்கிறார்கள். ” என்று பிராந்திய இயக்குனர், தெற்கு, DCBL. திரு. சுனில் அகர்வால் கூறினார். அவர் மேலும் கூறுகையில் “எனவே நம்பிக்கை வைப்பதற்காகவும், எங்கள் பிராந்திய இருப்பை வலுப்படுத்தும் போது எங்களுக்கு ஆதரவளிப்பதற்காகவும் அவர்களுக்கு வெகுமதி அளிக்க தனிப்பட்ட முறையில் வீடு கட்டுபவர்களுக்கு இந்தச் சலுகையை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.” என்றார்.
டால்மியா சிமெண்ட் (பாரத்) கரிம மற்றும் கனிம வாய்ப்புகளின் கலவையின் மூலம் விரைவான வளர்ச்சிப் பாதையில் உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்வதன் மூலம், நிறுவனம் அதன் தற்போதைய சந்தைகளில் தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘உங்கள் வீடு தயாராகும் முன்பே வீட்டிற்கான மகிழ்ச்சியைக் கொண்டுவாருங்கள்’ வாடிக்கையாளர் சலுகை தொடர்பான கூடுதல் விவரங்கள் http://www.dalmiadspoffer.com இல் கிடைக்கும். வெற்றியாளர்களுக்கு டால்மியா சிமென்ட் பிரதிநிதிகள் அவர்கள் ஈன்ற வெகுமதிகள் குறித்து தெரிவிப்பார்கள்!