மேற்கு வங்காளத்தில் இலவச கொரோனா தடுப்பூசி: முதல் மந்திரி அறிவிப்பு

0
203

மேற்கு வங்காளத்தில் இலவச கொரோனா தடுப்பூசி: முதல் மந்திரி அறிவிப்பு

கொல்கத்தா, இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி, வருகிற 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும்.

முதலில், சுகாதார பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை எங்களுடைய அரசு எடுத்து வருகிறது என்ற அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்து உள்ளார்.