மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய க்ரோஹேர் & க்ளோஸ்கின் கிளினிக் தனது 20 வது கிளையை நிறுவனரும் மேலாண் இயக்குனருமான சரண் வேல் ஜே, புவனா பாலகிருஷ்ணன் இந்திராநகர், பெங்களூரில் தொடங்கி வைத்தனர்.
முடி மற்றும் சரும பிரச்சினைகளுக்கான தீர்வு தேடி அதிகரித்து வரும் நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்வதில் மைல்கல்லாக இந்த 20 வது கிளை திறக்கப்பட்டுள்ளது.
முடி வளர்ச்சி மற்றும் தோல் சிகிச்சையில் முன்னணி பிராண்டாகப் புகழ் பெற்ற க்ரோஹேர் &க்ளோஸ்கின் கிளினிக் , சிறந்த சேவை, அதிநவீன தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை வழங்குவதில் சிறப்பாக செல்லப்படும் நிறுவனம் ஆகும்.
2021 இல் தொடங்கப்பட்ட க்ரோஹேர் & க்ளோஸ்கின் கிளினிக் 2024 ஆம் ஆண்டுக்குள் 100 கிளைகளை திறக்க திட்டமிட்டுளளது. அதிநவீன உபகரணங்களுடன், அழகியல் மருத்துவத் துறையில் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களால் இயக்கப்படும் இந்த கிளினிக் காப்புரிமை பெற்ற உயர்தர இயந்திரங்களைக் கொண்டுள்ளது.
புதிய கிளையின் திறப்பு விழாவில், கிளை உரிமையாளர் புவனா பாலகிருஷ்ணன் மற்றும் கிளினிக்கின் மற்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.