முகப்பேர் வேலம்மாள் பள்ளி டிஜிட்டல் வழியில் தொகுத்தளிக்கும் மார்கழி மகா உத்சவ் 2020

0
266

முகப்பேர் வேலம்மாள் பள்ளி டிஜிட்டல் வழியில் தொகுத்தளிக்கும் மார்கழி மகா உத்சவ் 2020.

ஆண்டுதோறும் நடைபெறும் டிசம்பர் மாத மார்கழி இசை விழாவிற்கு ஒரு சவாலாக தற்போது கோவிட் தொற்றுநோய் உருவெடுத்துள்ள இக்காலகட்டத்தில்
பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலமாக
நேரடி மார்கழி உத்சவ் 2020-ஐ மிகுந்த உற்சாகம் மற்றும் குதூகலத்துடன் வழங்க முகப்பேர்
வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப்பள்ளி திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு டிசம்பரிலும் சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் மகா உத்சவ் நிகழ்வு இப்போது முற்றிலும் டிஜிட்டலாக இருக்கும், மேலும் 2020 டிசம்பர் 23 முதல் 2021 ஜனவரி 5 வரை பத்து நாட்களுக்கு
வேலம்மாள் நெக்ஸஸ் யூடியூப் சேனலில் இந்த இசைக்கொண்டாட்டம்
நேரலையில் ஒளிபரப்பப்படும்.
இந்த சிறப்பான இசை உத்சவின் ஒரு பகுதியாக பல்வேறு வகையான இசைகளில் சிறந்த வல்லுநர்கள், பிரபல பின்னணிப் பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளனர். மேலும் வேலம்மாள் பள்ளி மாணவர்களும் இந்த மேடையில் தங்கள் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தத் தயாராக உள்ளனர். பிரபல பின்னணிப் பாடகர்களான திரு. சீனிவாஸ்,
திருமதி.அனுராதா
ஸ்ரீராம்,
திருமதி.நித்யஸ்ரீ மகாதேவன்,
திரு. ஷ்ரவன்ஆகியோர் இந்த மார்கழி உத்சவத்தில் கலந்து கொண்டு
இந்த இசைநிகழ்வின் மூலம்
நம் உள்ளங்களை வண்ணமயமாக்கக்
காத்திருக்கின்றனர். நீண்டகாலமாக அனைத்துக் கலை
ஆன்மாக்களின் நினைவுகூறும் பொக்கிஷமாக மதிப்பிடப்படும் இந்த நேரடி இசை அமர்வுகளின் வரிசையில் உங்கள் நேரத்தை ஒதுக்கிப் பயன்பெறுங்கள்.