மிஸ்டர், மிஸ் & மிஸஸ் தமிழகம் 2022 போட்டியில் நடிகை ரெத்திகா ஸ்ரீனிவாஸ், இந்தியன் மீடியா ஒர்க்ஸ்  தலைவர் ஜான் அமலன், மிஸ்டர் ஃபேஷன் வேர்ல்ட் இந்தியா மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் மாபெரும் போட்டியாளர் தேர்வு சென்னையில் நடைபெற்றது

0
101
மிஸ்டர், மிஸ் & மிஸஸ் தமிழகம் 2022 போட்டியில் நடிகை ரெத்திகா ஸ்ரீனிவாஸ், இந்தியன் மீடியா ஒர்க்ஸ்  தலைவர் ஜான் அமலன், மிஸ்டர் ஃபேஷன் வேர்ல்ட் இந்தியா மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் மாபெரும் போட்டியாளர் தேர்வு சென்னையில் நடைபெற்றது.

சென்னை கிண்டியில் உள்ள ஹில்டன் நட்சத்திர விடுதியில் மிஸ்டர் மிஸ் & மிஸஸ் தமிழகம் 2022 போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி  பெற்றவர்கள் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள இந்திய அளவிலான   ஃபேஷன் போட்டியில் பங்கேற்க தகுதி  பெற்றுள்ளனர்.

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில், சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் வகையிலும், ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நடிகை ரெத்திகா ஸ்ரீனிவாஸ்,ஜான் அமலன் (இந்தியன் மீடியா ஒர்க்ஸ் தலைவர்), தானியா பாலாஜி ( Fashion influencer & Entrepreneur ), மணிகண்டன் (மிஸ்டர் ஃபேஷன் வேர்ல்ட் இந்தியா 2021) ஆகியோர் முன்னிலையில்  பேஷன் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்னிந்தியாவின் முன்னணி பேஷன்  கோரியோகிராபர் வினோத்   ஆகியோர் முன்னிலையில் ஆண்கள், பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என 3 பிரிவினருக்கான இந்த மாபெரும் போட்டியாளர் தேர்வில், தமிழகம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டு, தங்களது திறமைகளைக் காட்டி, மேடையில் அன்ன நடை போட்டனர்.

இதில் தேர்வான போட்டியாளர்கள் ஜூன் மாதம்  நடைபெறவுள்ள ‘Mr, Miss & Mrs 2022 Fashion world’ இறுதிப்போட்டியில் போட்டியில் பங்கேற்க உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு மகுடம் சூட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.