மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்டு தொடங்கும் மிரே அசெட் மல்ட்டிகேப் ஃபண்டு

0
170

மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்டு தொடங்கும் மிரே அசெட் மல்ட்டிகேப் ஃபண்டு

(அதிக, நடுத்தர  மற்றும் சிறிய மூலதனங்கள் உள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் திறந்தமுனை கொண்ட ஈக்விட்டி திட்டம்)

மும்பை: ஜுலை 28, 2023: இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களுள் ஒன்றான மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்டு, அதிக, நடுத்தர  மற்றும் சிறிய மூலதனங்கள் உள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் திறந்தமுனை கொண்ட ஈக்விட்டி திட்டமான மிரே அசெட் மல்ட்டிகேப் ஃபண்டு தொடங்கப்படுவதை அறிவித்திருக்கிறது.

இந்த ஃபண்டுக்கான NFO, 2023 ஜுலை 28 முதல் சப்ஸ்கிரிப்ஷன் பெறுவதை தொடங்குகிறது மற்றும் 2023 ஆகஸ்ட் 11 அன்று இது முடிவுக்கு வருகிறது.  இந்த ஃபண்டு – ஐ திரு. அங்கித் ஜெயின் நிர்வகிப்பார்.  இந்த ஃபண்டுக்கான பெஞ்ச்மார்க் குறியீடு நிஃப்டி 500 மல்ட்டிகேப் 50:25:25 TRI என்பதாக இருக்கும்.

இந்த ஃபண்டில் குறைந்தபட்ச தொடக்க முதலீடு, ரூ5000 ஆகவும் மற்றும் அதற்குப் பிறகு ரூ.1 – ன் பன்மடங்கு தொகையாகவும் இருக்கும்.

முக்கிய அம்சங்கள்: பல்வேறு அளவிலான மூலதனங்களை கொண்டுள்ள நிறுவனங்களில் தங்களது ஈக்விட்டி போர்ட்போலியோவை கொண்டிருக்க விரும்புகின்ற அல்லது தான் முதலீடு செய்திருக்கின்ற ஃபண்டு திட்டங்களின் எண்ணிக்கையை வரம்பிற்குள் வைத்திருக்க விரும்புகின்ற முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு அதிகமான காலஅளவுள்ள முதலீட்டு விருப்பத்தேர்வுகளுள் ஒன்றாக இது இருக்கும். அனைத்து வகையின மூலதனம் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதை இது சாத்தியமாக்கும்.

  • ஒவ்வொரு வகையினமும் குறைந்தபட்சம் 25% & அதிகபட்சமாக 50% என்பதை கொண்டிருக்கும். வெவ்வேறு பிரிவுகளிலும் சமஅளவிலான பங்கேற்பு இதனால் உறுதி செய்யப்படும்.
  • ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களுடன் முதிர்ச்சியடைந்த பிசினஸ் செயல்பாடுகளை கொண்டிருக்கும் லார்ஜ் கேப் (பெருமுதலீடு) நிறுவனங்களிலான முதலீடு, சந்தை முதலாக்கத்தின் படி முதன்மையான 100 நிறுவனப் பங்குகளில் இருக்கும். ஆகவே, நடுத்தர மற்றும் சிறிய  மூலதன நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், பங்குகளின் மதிப்பு சரிவடைகின்ற மற்றும் ஏற்ற இறக்கம் காணப்படுகிற இடர்ஆபத்து இதில் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.
  • நடுத்தர அளவு முதலீடுள்ள நிறுவனங்கள் வகையினம் என்பது, சந்தை முதலாக்கத்தின் படி அடுத்த 150 (101 முதல் 250 வரை) நிறுவனங்களின் பங்குகளாக இருக்கும்.  இந்நிறுவனங்கள் பெரும்பாலும், ஓரளவுக்கு சிறப்பான மதிப்பீடுகளுடன் வளர்ச்சியடைந்து வரும் பிசினஸ் நிறுவனங்களாக இருக்கும்.
  • சிறிய அளவு முதலீடுள்ள நிறுவனங்கள் வகையினம் என்பது, சந்தை முதலாக்கத்தின்படி, தரவரிசையில் 251 மற்றும் அதற்கு அடுத்ததாக உள்ள நிறுவனங்களின் பங்குகளாக இருக்கும். சமீபத்தில் தொடங்கப்பட்டு, அளவில் விரிவாக்கப்படக்கூடிய மற்றும் சாத்தியத்திறன் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்கள் இதில் உள்ளடங்கும்.  இந்நிறுவனங்களது பங்குகளின் மதிப்பு சரிவடைவதற்கு உயரளவிலான இடர்வாய்ப்பை கொண்டிருக்கின்றன.  அதே வேளையில், மிக அதிகமாக லாபமீட்டும் சாத்தியத்திறனையும் இந்நிறுவனங்களது பங்குகள் கொண்டிருக்கும்.
  • இறுதியாக உள்ள 25% முதலீடுகள், தன்மையில் அதிகளவு உத்தி சார்ந்ததாக இருக்கும். இந்த மூன்று வகையின சந்தை முதலாக்கத்தை கொண்டிருக்கும் நிறுவனங்கள் மீது மாறிக்கொண்டே வருகின்ற ஒதுக்கீடு வழியாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை இந்த முதலீடு சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும்.

மிரே அசெட் மல்ட்டிகேப் ஃபண்டு, சந்தை முதலாக்கம் மற்றும் துறை சார்ந்ததாக இருப்பதால், உயர் நேர்த்தியான செயல்பாட்டின் ஆதாயங்களை அனுபவிக்கின்ற துறைகள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யும் சிறந்த அனுபவத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கும்; அத்துடன், பொருளாதார நடவடிக்கைகளில் புதிதாக கொண்டு வரப்படும் தொழில்நுட்ப மாற்றங்களின் பலனையும் பெறுவதற்கு வகை செய்யும்.  மிக விரிவாக தங்களது முதலீடு போர்ட்ஃபோலியோ பரவியிருப்பதை விரும்பாத, ஆனால், அனைத்து துறைகளின் சிறந்த பலன்களை அனுபவிக்க விரும்புகின்ற வாடிக்கையாளர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

மிரே அசெட் மல்ட்டிகேப் ஃபண்டு மேலாளர் திரு. அங்கித்  ஜெயின் இதுபற்றி கூறியதாவது: “எமது முதலீட்டாளர்களது முதலீடு உத்திகளை செயல்படுத்தும் வகையில் அவர்களது லாபத்தை அதிகமாக்குவதை ஏதுவாக்குகின்ற பல்வேறு விருப்பத்தேர்வுகளை வழங்க வேண்டும் என்பதை தொடக்கத்திலிருந்தே எங்களது குறிக்கோளாகவும், செயல்முயற்சியாகவும் இருந்து வருகிறது.  மிரே அசெட் மல்ட்டிகேப் ஃபண்டு  திட்டமும் இதே கோட்பாட்டை பின்பற்றுகிறது.  ஒன்றுக்கும் மேற்பட்ட பல திட்டங்கள் சேர்க்கப்படுவதை அவசியமாக்காமல், சந்தையின் பல்வேறு பிரிவுகளிலும் தங்களது முதலீடுகளை விரிவாக்கம் செய்ய முதலீட்டாளர்களை இது ஏதுவாக்குகிறது.  இந்த மல்ட்டிகேப் ஃபண்டு, லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வதால், வாய்ப்புகளையும், இடரையும் பன்மயமாக்குகிறது;  இதன் வழியாக,  இடரையும், ஆதாயத்தையும் சமநிலைப்படுத்தும் ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது.”

திரு. ஜெயின் மேலும் பேசுகையில், “உலகப் பொருளாதார சூழலில் கொந்தளிப்பு நிலை காணப்படுகிற போதிலும், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வலுவாக பயணிக்கிறது.  இந்த சூழலை பலனளிக்கும் வகையில்,  பயன்படுத்திக் கொள்வதும், பல்வேறு துறைகளில் துடிப்பான, நேர்மறையான ஆதாயங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதும் மிரே அசெட் மல்ட்டிகேப் ஃபண்டின் நோக்கமாகும்.” என்று குறிப்பிட்டார்.

ரெகுலர் பிளான் மற்றும் டைரக்ட் பிளான் என்ற இருவழிமுறைகளிலும் மிரே அசெட் மல்ட்டிகேப் ஃபண்டு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.  NFO செயல்முறை நிறைவடைந்த பிறகு, குறைந்தபட்ச கூடுதல் கொள்முதல் தொகையானது, ரூ.1000 மற்றும் அதற்குப் பிறகு ரூ.1-ன் பன்மடங்கு தொகையாக இருக்கும்.

For further information, contact:

Abhilash Ravindran, Mirae Asset Investment Managers (India) Pvt. Ltd.

[email protected] | M: +91-7498772798

Dattu Hegde, The Good Edge

[email protected] | M: +91-9920710013

DISCLAIMERS & PRODUCT LABEL:
NSE Indices Ltd Disclaimer: NSE INDICES LIMITED do not guarantee the accuracy and/or the completeness of the Index or any data included therein and NSE INDICES LIMITED shall have not have any responsibility or liability for any errors, omissions, or interruptions therein. NSE INDICES LIMITED does not make any warranty, express or implied, as to results to be obtained by the Issuer, owners of the product(s), or any other person or entity from the use of the Index or any data included therein. NSE INDICES LIMITED makes no express or implied warranties, and expressly disclaims all warranties of merchantability or fitness for a particular purpose or use with respect to the index or any data included therein. Without limiting any of the foregoing, NSE INDICES LIMITED expressly disclaim any and all liability for any claims, damages or losses arising out of or related to the Products, including any and all direct, special, punitive, indirect, or consequential damages (including lost profits), even if notified of the possibility of such damages

Statutory Details: Trustee: Mirae Asset Trustee Company Private Limited; Investment Manager: Mirae Asset Investment Managers (India) Private Limited (AMC); Sponsor: Mirae Asset Global Investments Company Limited.

The information contained in this document is compiled from third party and publicly available sources and is included for general information purposes only. There can be no assurance and guarantee on the yields. Views expressed cannot be construed to be a decision to invest. The statements contained herein are based on current views and involve known and unknown risks and uncertainties. Whilst Mirae Asset Investment Managers (India) Pvt. Ltd. (the AMC) shall have no responsibility/liability whatsoever for the accuracy or any use or reliance thereof of such information. The AMC, its associate or sponsors or group companies, its Directors or employees accepts no liability for any loss or damage of any kind resulting out of the use of this document. The recipient(s) before acting on any information herein should make his/her/their own investigation and seek appropriate professional advice and shall alone be fully responsible / liable for any decision taken on the basis of information contained herein. Any reliance on the accuracy or use of such information shall be done only after consultation to the financial consultant to understand the specific legal, tax or financial implications.

For further information about other schemes (product labelling and performance of the fund) please visit the website of the AMC: www.miraeassetmf.co.in

Please consult your financial advisor or mutual fund distributor before investing

The Product Labelling assigned during the NFO is based on internal assessment of the scheme characteristics or model portfolio and the same may vary post NFO when the actual investments are made.