மகளிர் தினத்தை முன்னிட்டு, ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் ஒண்டர் உமன் விருதுகள் வழங்கும் விழா

0
175
மகளிர் தினத்தை முன்னிட்டு, ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் ஒண்டர் உமன் விருதுகள் வழங்கும் விழா சென்னை சவேரா ஓட்டலில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த  15 க்கும் மேற்பட்ட பெண் ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில்  நடிகைகள் இனியா, வடிவுக்காரசி மற்றும் சாரதா ரமணி, நீனா ரெட்டி, சிந்து வினோத்குமார், பினா போயஸ், தாரணி கோமல், தேவி கிருஷ்ணா, முனைவர் மாயலக்ஷ்மி, முனைவர் கிரேசி, மரு. சவுமியா ரமணி, மரு.டாஸ்மியா பாப்பா, ப்ரார்ஹிபா யுவராஜ்,  உள்ளிட்ட 15 பேருக்கு சிறந்த பெண் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்பட்டன.
 குறிப்பாக இருளர் இன பெண் மணியான சொர்ணலதாவும், பழங்குடி இனத்தை சேர்ந்த ஆசிரியர் சித்ராவும் சிறந்த பெண் ஆளுமைகளுக்கான விருதைப்பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்கள் பழங்குடி பெண்கள் வளர்ச்சிக்காக க்ளோபலிங் டபிள்யூ.டபிள்யூ நிறுவனம் வழங்க ஜியோ இந்தியா பவுண்டேஷன் நிறுவனர் பிரியா ஜெமீமா பெற்றுக்கொண்டார்.
விருது பெற்றவர்கள் அனைவருமே சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள் என்றும் கிராமப்புற பெண்களின் சக்தியை பயன்படுத்தும் வகையில் ஊக்கமளிக்க இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஜியோ இந்தியா பவுண்டேஷன் நிறுவனர் ப்ரியா ஜெமீமா தெரிவித்துள்ளார்.