பெட்ரோலில் இயங்கும் 2 புதிய மாடல் வால்வோ கார்கள் அறிமுகம்!

0
139

பெட்ரோலில் இயங்கும் 2 புதிய மாடல் வால்வோ கார்கள் அறிமுகம்!

 • S90 மற்றும் XC60 என, இரு கவர்ச்சிகரமான வால்வோ கார்களை, புதிய சேவைத் திட்டங்களுடன் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது, வால்வோ கார் இந்தியா!
 • கூகுள் சேவைகள், அதிநவீன காற்று சுத்திகரிப்பு வசதி மற்றும் வால்வோ கார் மொபைல் அப்ளிகேஷன் போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன!
 • விரைவில் மற்றொரு பெட்ரோல் மாடல் காரான XC90 அறிமுகம்! 

சென்னை, நான்கு சக்கர வாகனப் பயணத்தில் இன்றுள்ள அதிநவீன சொகுசு வசதிகளை அனுபவிக்க விரும்பும் தமிழக வாடிக்கையாளர்களுக்காக, வால்வோ கார் இந்தியா (Volvo Car India), 2 புதிய பெட்ரோல் வாகனங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. சொகுசு செடான் எஸ்90 (Luxury Sedan S90) மற்றும் நடுத்தர அளவுள்ள சொகுசு எஸ்.யூ.வி. எக்ஸ்.சி.60 (Mid-size Luxury SUV XC60) என்ற பிராண்ட் பெயர்களில், இந்த இரு கார்களின் அறிமுகம் இன்று (அக்டோபர் 22, 2021) சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் உள்ள வால்வோ ஷோரூமில் நடைபெற்றது. “இந்த 2021-ஆம் ஆண்டு இறுதிக்குள், தனது பெட்ரோல் வாகன வரிசையை நிறைவு செய்ய வேண்டும்” என்ற இந்நிறுவன இலக்கின் ஒரு பகுதியாக இவ்விரு வாகனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய வாகனங்களான S90 மற்றும் XC60 இரண்டும், தலா 61 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் (Ex-Showroom) விலையாகும்.

இந்த வாகனங்களில் கூகுள் உள்ளிட்ட பிற நவீன அப்ளிகேஷன்களை… மென்பொருள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எளிதாக வாகனத்தை இயக்கிச் செல்லும் வசதிகள் உள்ளன. அதனால், கூகுள் அசிஸ்டெண்ட் உதவியை குரல் வடிவில் பெற முடிவதோடு, கூகுள் மேப்ஸின் வழிகாட்டுதலும் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும், இந்தக் கார்களில் அடுத்த தலைமுறை தொலைத் தொடர்பு வசதியைப் பயன்படுத்திக் கொள்ள ஏற்ற வசதிகள் இடம்பெற்றிருப்பதால், வாகன ஓட்டியின் உள்ளுணர்வுக்கு ஏற்ற வகையில், தற்போதுள்ள பல்வேறு பொழுதுபோக்கு வாய்ப்புகளைப் பயன்படுத்தும் வசதி இதில் உள்ளது. அதோடு, காரை இயக்கியபடியே, ஸ்டியரிங்கில் இருந்து கை எடுக்காமலேயே உங்கள் மொபைல் போனுக்கு வரும் அவசர தொலைப்பேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லலாம்; உடனடி தேவையான தகவல்களை மற்றவர்களிடம் இருந்து பெற தொலைப்பேசியில் அழைக்கலாம். அவ்வகையில் ஓப்பீடு இல்லாத நிலைக்கு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொலைத் தொடர்பு வசதிகள் இந்த வாகனங்களில் உள்ளன.

இது மட்டுமின்றி, இந்தப் புதிய கார் மாடல்களுக்கு 3 ஆண்டுகளுக்கான வால்வோ வாகனச் சேவை வசதியை (Volvo Service Package) ரூ. 75,000 (வரிகள் தனி) என்ற குறைவான கட்டணத்தில் தற்போது இந்நிறுவனம் வழங்குகிறது. இந்தச் சிறப்புச் சலுகை விழாக் காலத்தையொட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சலுகை விலை வாகன சேவை வசதியில், அடுத்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான பராமரிப்பு சேவையோடு, தேய்மானத்தால் மாற்றம் செய்ய வேண்டிவரும் பொருட் செலவும் அடங்கும்.

இந்த வாகன அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வால்வோ கார் இந்தியாவின் நெட்வொர்க் மற்றும் பிராடக்ட் துறையின் இயக்குனர் திரு. ராஜீவ் சவ்கான் (Mr Rajeev Chauhan) செய்தியாளர்களிடம் பேசுகையில், “எப்போதுமே தமிழ்நாடு, ஒரு முக்கியமான சந்தையாக எங்களுக்கு இருந்து வருகிறது. மேலும், அதிவேக வளர்ச்சி காணும் மெட்ரோ நகரங்களில் ஒன்றாக சென்னை இருப்பதோடு, பொருளாதார வளமும், வலிமையும் நிறைந்தவர்கள் வாழ விரும்பும் இடமாகவும் அமைந்துள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த வாகனப் பயண அனுபவத்தை வழங்குவதில் வால்வோ கார் நிறுவனம் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் அது குறுகிய அனுபவமாக இல்லாமல், பயணிப்பவருக்கு முழுமையான திருப்தியை கடைசி வரை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறது.

தமிழக வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, சொகுசான பயணத்தை நாடும் அதே வேளையில், அப்பயணம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள். அத்தகைய வாடிக்கையாளர்கள் முழு மனநிறைவு பெறும் வகையிலான புதிய அம்சங்களும், தொழில்நுட்பங்களும் எங்களது இந்த இரு வாகனங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

வால்வோ கார் குழுமம் அமெரிக்க நிறுவனமான கூகுளுடன் சிறப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி, ஆண்ட்ராயிட் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக, வழங்கப்படும் அனைத்து கூகுள் சேவைகளும், பொழுதுபோக்கு வசதிகளும் அனைத்து வால்வோ நிறுவன கார்களிலும் தற்போது வழங்கப்படுகிறது. மறுபுறம் கார்களின் கட்டமைப்பு, செயல்திறன், உறுதி, பாதுகாப்பு போன்ற அம்சங்களில் வால்வோ அனைத்து நவீன அம்சங்களையும் இந்தப் புதிய கார்களில் இணைத்துள்ளது.

புதிதாக விரைவில் அறிமுகமாக இருக்கும் S90 மாடல் காரில், 4 உயர்வகை கதவுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தக் கார் – வால்வோ நிறுவனத்தின் அதிநவீன வாகன வடிவமைப்பு செயல்பாட்டின்படி, தேவையானால், கூடுதல் இணைப்புகளைச் சேர்த்துக் கொள்ளும் வசதி (Scalable Product Architecture – SPA) கொண்டதாக அமையும். அதனால், வாகன நீளத்தை மாற்றியமைத்து, அதிக நபர்கள் பயணிக்கும் வாகனமாக, இதை மேம்படுத்த சாத்தியம் உண்டு. அதோடு, இந்த வாகன கட்டமைப்பில் சிறப்பு வகை போரான் இரும்பு உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, மேலும் பல நவீன பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால், வாகனத்தின் உள்ளிருந்து பயணிப்பவர் மட்டுமின்றி, சாலையில் செல்லும் மற்றவர்களின் பாதுகாப்புக்கும் அதிக முக்கியம் அளிக்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த கார் என தேர்வான -கார் பயணிகளிடையே ஏற்கனவே பிரபலமாக உள்ள XC60 வாகனத்தில், தற்போது – வால்வோ கார் நிறவனத்தின் அதி நவீன வசதியான வாகன ஓட்டி உதவி சேவைகள் (ADAS – Advanced Driver Assistance Systems) இணைக்கப்பட்டுள்ளன. அதனால், வாகனத்தைச் சுற்றியுள்ள பொருட்களை உணரும் வகையிலான சென்சார், பல தரப்பட்ட அலைவரிசை தொலைத் தகவல்களையும் உணரும் ராடார்கள், கேமராக்கள், அதிநுட்ப ஒலி உணர்வு சாதனங்கள் (Ultrasonic Sensors) போன்றவையும் இந்த வாகனத்தின் ஒரு அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளன.

Key Specifications for the New Cars:

The New S90 B5 Inscription (Petrol Mild-Hybrid)

The New XC60 B5 Inscription (Petrol Mild-Hybrid)

 • Capacity: 1969 cc
 • Max output: 250 hp
 • Max Torque: 350 Nm
 • Automatic 8-speed FWD (S90)
 • Automatic 8-speed AWD (XC60)
 • Advanced Air Cleaner with PM 2.5 sensor
 • Android powered infotainment system with Google Services
 • Adaptive Cruise Control
 • Pilot Assist
 • Lane Keeping Aid
 • Blind Spot Information System with Cross traffic alert
 • Collision Mitigation Support (front)
 • Collision warning and Mitigation support (rear)
 • 360-degree camera
 • Parking Assistance (front, rear & side)

ALSO READ:

Volvo Car India launches Petrol Mild-Hybrids in Tamil Nadu