பரோடா பிஎன்பி பரிபா ஃபிளெக்ஸிகேப் ஃபண்டு என்ற புதிய NFO அறிமுகம்

0
132

பரோடா பிஎன்பி பரிபா ஃபிளெக்ஸிகேப் ஃபண்டு என்ற புதிய NFO அறிமுகம்

பரோடா பிஎன்பி பரிபா மியூச்சுவல் ஃபண்டு அறிமுகம் செய்யும் இந்த திறந்தமுனை கொண்ட டைனாமிக் ஈக்விட்டி திட்டம் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய மூலதனம் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும்.

26 ஜுலை 2022: – பரோடா பிஎன்பி பரிபா மியூச்சுவல் ஃபண்டு, பல்வேறு வகைப்பட்ட சந்தை மூலதன நிறுவனங்களில் முதலீடு செய்கின்ற நெகிழ்வுத்திறன் கொண்ட ஒரு டைனாமிக் ஈக்விட்டி திட்டமான பரோடா பிஎன்பி பரிபா ஃபிளெக்ஸி கேப் ஃபண்டு தொடங்கப்படுவதை அறிவித்திருக்கிறது.  இதற்கான நியூஃபண்டு ஆஃபர் (NFO), 2022 ஜுலை 25 முதல், ஆகஸ்ட் 5-ம் தேதி வரை சப்ஸ்கிரிப்ஷன் செயல்முறைக்காக கிடைக்கப்பெறும்.  பரோடா பிஎன்பி பரிபா அசெட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் ன் (முன்னதாக பிஎன்பி பரிபா அசெட் மேனெஜ்மெண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்) தலைமை முதலீட்டு அதிகாரி ஈக்விட்டி, திரு. சஞ்சய் சாவ்லா அவர்களால் இந்த ஃபண்டு நிர்வகிக்கப்படும்.

பரோடா பிஎன்பி பரிபா அசெட் மேனேஜ்மென்ட் பிரைவேட்  –ன் செயல் அலுவலர் திரு. சுரேஷ் சோனி இந்த ஃபண்டு தொடக்கம் குறித்து கூறியதாவது: “தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்ற உலகில் நாம் வாழ்கிறோம்.  ஈக்விட்டி (பங்கு) சந்தைகள் இதை பிரதிபலிக்கின்றன.  பொருளாதாரமும், தொழில் நிறுவனங்களும் மாற்றம் காணுகிறபோது சிறப்பாக செயல்படுகின்ற முதன்மை நிறுவனங்களும், பிரிவுகளும் மற்றும் சந்தை மூலதன மதிப்பும் அதற்கேற்றவாறு மாற்றிக்கொண்டே இருக்கின்றன.  ஆகவே, போர்ட்ஃபோலியோக்களை நிர்வகிக்கிறபோது ஃபண்டை நிர்வகிக்கின்ற மேலாளர்கள், இம்மாற்றங்கள் பற்றி நன்கு அறிந்தவர்களாகவும் மற்றும் அதற்கேற்றவாறு முதலீடு செய்கின்ற முறையில் திறனுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.  எனவே, ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள், பல்வேறு சந்தை மூலதன நிறுவனங்கள் மற்றும் பிரிவுகளில் முதலீடு செய்யலாம்; இதன் வழியாக அவ்வப்போது நிலவுகின்ற சந்தை நிலைகள், மதிப்பீடுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான சாத்திய வாய்ப்புகள் அடிப்படையில் முதலீட்டிற்கான போர்ட்போலியோவை உகந்தவாறு மாற்றுவதற்கு ஃபண்டு மேலாளர்களை இது அனுமதிக்கும்.  இதுவே, ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள் அனைத்தையும் ஒன்றில் உள்ளடக்கிய ஈக்விட்டி தீர்வாக ஆக்குகிறது;  அனைத்து சந்தை நிலமைகளுக்கும் மற்றும் பரந்து விரிந்த மாறுபட்ட முதலீட்டாளர்களுக்கும் உகந்ததாக இதனை ஆக்குகிறது”

முதலீடு செய்வதில் மூன்றுமுனை கொண்ட அணுகுமுறையை இச்செயல்திட்டம் பின்பற்றும்.  குறிப்பிட்ட தேர்வுசெய்த துறைகளுக்கு மேலிருந்து கீழ்நோக்கி வரும் அணுகுமுறையையும் மற்றும் சந்தை கேப்ஸ்களுக்கு கிடைமட்டமாக அணுகுமுறையையும் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பங்குகளுக்கு கீழிருந்து மேல்நோக்கி செல்லும் அணுகுமுறையையும் கொண்டதாக இச்செயல்திட்டம் இருக்கும்.

“பல்வேறு மூலதன அளவுகளை கொண்ட நிறுவனங்களிலும் மற்றும் துறைகளிலும் முதலீட்டிற்கான அளவீடுகளை தேடிப் பயன்படுத்துகின்ற நெகிழ்வுத்திறன், அவைகளின் வளர்ச்சி சாத்தியத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் மற்றும் முதலீடுகளை மாற்றுகின்ற செய்முறை வழியாக இடர்களை சமாளிக்கவும் உதவும்.  எமது ஈக்விட்டி முதலீட்டு கோட்பாட்டின் வழிகாட்டலை சார்ந்திருக்கும் இந்த முதலீட்டுத் திட்டம், வலுவான பிசினஸ் மற்றும் பொருளாதார அடித்தளங்களையும், மதிப்பும், கௌரவமும் கொண்ட மேலாண்மை / நிர்வாகத் தலைமையையும் மற்றும் சிறப்பான நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளையும் கொண்டிருக்கும் நிறுவனங்களை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.” என்று திரு. சஞ்சய் மேலும் கூறினார்.

ஒதுக்கீட்டுத் தேதியிலிருந்து ஐந்து பிசினஸ் / அலுவலக நாட்களுக்குள் தற்போது நடைபெறுகின்ற சப்ஸ்கிரிப்ஷன் செயல்பாட்டை  பரோடா பிஎன்பி பரிபா ஃபிளெக்ஸி கேப் ஃபண்டு மீண்டும் தொடங்கும்.