பப்புவா நியூ கினியாவின் வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு ஜனாதிபதி திருமதி திரௌபதி முர்முயை  சந்தித்து பப்புவா நியூ கினியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்து விவாதித்தார்

0
305
பப்புவா நியூ கினியாவின் வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு ஜனாதிபதி திருமதி திரௌபதி முர்முயை  சந்தித்து பப்புவா நியூ கினியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்து விவாதித்தார்
பப்பூவா நியூகினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு அவர்கள் இந்திய நாட்டின் 15 – வது குடியரசு தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்களை | மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து தமிழக பாரம்பரியம் மற்றும்  கலாச்சாரம் என்ற. புத்தகத்தை  வழங்கினார்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷேசம் என்னவென்றால் பப்புவா நியூ கினியாவை பொறுத்தவரை பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு என்பது தான். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்தச் சந்திப்பின் போது குடியரசுத் தலைவருக்கு உலகப்புகழ் பெற்ற ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ்களை பரிசளித்திருக்கிறார் விஷ்ணு பிரபு.
இதேபோல் நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க தோடர் சமுதாயத்தினர் தயாரிக்கும் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய சால்வை ஒன்றும் குடியரசுத் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சந்திப்பின் போது, பப்புவா நியூ கினியா நாட்டுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கிறது.