‘பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தப்படவில்லை’ – நிர்மலா சீதாராமன்

0
121

‘பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தப்படவில்லை’ – நிர்மலா சீதாராமன்

ஜெட்டில் ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தப்படவில்லை என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து துறைகளின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மக்கள் நேரடியாக சேவை பெறும் துறைகளின் கூடுதல் கடன் வசதிக்காக ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் விருந்தோம்பல் துறை அதிக சிரமத்திலுள்ளதால் அவசரக்கால கடன் உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சியின் பங்குகளை மதிப்பிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

பிட்காயின் போன்றவை டிஜிட்டல் கரன்சி அல்ல. டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த பட்ஜெட்டிலும், நடப்பு பட்ஜெட்டிலும் ஒரு ரூபாய் கூட புதிதாக வரி விதிக்கப்படவில்லை. வரி வசூல் குறிக்கோள்கள் சாத்தியமாகும் அளவில் கணக்கிடப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.