பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் – அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கை

0
91

பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் – அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கை

திருச்சியில் நடந்த சோகமான மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு குறித்து பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் இதன்மூலம் தெளிவுபடுத்த விரும்புவது என்னவெனில், இறந்துபோன வாடிக்கையாளர் எங்கள் கிளைக்கு வந்து தனது நிலுவைத் தொகையைச் செலுத்த கூடுதல் கால அவகாசம் கேட்டார். இந்த நிலையில் எங்கள் நிறுவன பிரதிநிதிகள் ஏற்கனவே நிலுவைத் தொகை செலுத்த வேண்டிய தேதி கடந்து விட்டதால் நீங்கள் இன்றே நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து அந்த வாடிக்கையாளர் எங்கள் கிளை அலுவலகத்தில் இருந்து கிளம்பி சென்றுவிட்டார்.

எங்கள் நிறுவன கிளையில் நாங்கள் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், எங்கள் பிரதிநிதிகளால் எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவங்களும் அங்கு நடைபெறவில்லை என்பதை நாங்கள் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அந்த வாடிக்கையாளரின் மொபைல் போன் அல்லது இரு சக்கர வாகனத்தை  பறிமுதல் செய்ததாக பத்திரிக்கையில் செய்தி வெளியாகி உள்ளது. அதுபோன்ற எந்தவித சம்பவமும் நடைபெறவில்லை.

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் கடன் மேலாண்மை பிரிவு கடுமையான நடத்தை விதிகளைப் பின்பற்றுகிறது, மேலும் இது எல்லா நேரங்களிலும் அதன் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏஜென்சிகளால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் ஏதேனும் தவறு நடந்தால், நிறுவனத்தின் கொள்கைகளின்படி, தகுந்த தண்டனையும் தக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களை வழங்குவதோடு அவர்களுக்கு அனைத்து விதத்திலும் நிறுவனம் முழுமையாக ஒத்துழைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த விஷயம் நீதித்துறை பரிசீலனையில் உள்ளது, எனவே பிற இடங்களில் இது குறித்து விவாதம் செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது.