பஜாஜ் ஃபின்செர்வ் ஏஎம்சி தொடங்கும் பஜாஜ் ஃபின்செர்வ் லிக்விட் ஃபண்டு மற்றும் பஜாஜ் ஃபின்செர்வ் ஓவர்நைட் ஃபண்டு
மும்பை / புனே: பன்முக செயல்பாடுகளுடன் நிதிசார் சேவைகளை வழங்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகத் திகழும் பஜாஜ் ஃபின்செர்வ் – ன் ஒரு அங்கமான பஜாஜ் ஃபின்செர்வ் அசெட் மேனேஜ்மெண்ட் லிமிடெட் (பஜாஜ் ஃபின்செர்வ் ஏஎம்சி), இரு புதிய ஃபண்டுகள்அறிமுகம் செய்யப்படுவதை அறிவித்திருக்கிறது. பஜாஜ் ஃபின்செர்வ் லிக்விட் ஃபண்டு மற்றும் பஜாஜ் ஃபின்செர்வ் ஓவர்நைட் ஃபண்டு என்ற இந்த இரண்டும், செபி அமைப்பிடம் இந்நிறுவனம் சமர்ப்பித்திருக்கும் ஏழு ஃபண்டு செயல்திட்டங்களுள் முதல் இரண்டு திட்டங்களாகும்.
பஜாஜ் ஃபின்செர்வ் அசெட் மேனேஜ்மெண்ட் லிமிடெட் – ஐ முதலீட்டு மேலாளராக கொண்டு பஜாஜ் ஃபின்செர்வ் மியூச்சுவல் ஃபண்டு என்ற பெயரில் தனது மியூச்சுவல் ஃபண்டு செயல்பாடுகளைத் தொடங்க 2023 மார்ச் மாதத்தில் செபி அமைவிடமிருந்து இறுதி பதிவினை பஜாஜ் ஃபின்செர்வ் பெற்றிருந்தது.
பஜாஜ் ஃபின்செர்வ் மியூச்சுவல் ஃபண்டு 2023 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தனது முதல் ஏழு ஃபண்டு செயல்திட்டங்களை செபி அமைப்பில் தாக்கல் செய்திருந்தது: லிக்விட் ஃபண்டு, மணி மார்க்கெட் ஃபண்டு, ஒவர்நைட் ஃபண்டு, ஆர்பிட்ரேஜ் ஃபண்டு, லார்ஜ் மற்றும் மிட் – கேப் ஃபண்டு, பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டு மற்றும் ஃபிளெக்ஸி கேப் ஃபண்டு.
பஜாஜ் ஃபின்செர்வ் லிக்விட் ஃபண்டு என்பது, ஒரு திறந்த முனை கொண்ட ஒரு முதலீட்டு திட்டமாகும்; அதிகபட்சமாக 91 நாட்கள் வரை முதிர்வுடன் கடன் மற்றும் பணச்சந்தைகளில் முதலீடு செய்யப்படும் இந்த மியூட்சுவல் ஃபண்டு ஒரு அவசரநிலை நிதியத்தை உருவாக்குவதற்கு பொருத்தமானதாகும்; ஏனெனில் எளிதில் பணமாக்கக்கூடிய மற்றும் விரைவாக மீட்கக்கூடிய விருப்பத்தேர்வுகளை இது வழங்குகிறது.
வேறு செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் வரை குறைந்த காலஅளவுக்கு அதிகளவிலான பணத்தை ஆதாயம் தரும் வகையில் தற்காலிகமாக வைத்திருக்க வேண்டிய தேவையுள்ள தொழில்முனைவோர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள பஜாஜ் ஃபின்செர்வ் ஓவர்நைட் ஃபண்டு, பணச்சந்தையிலும் மற்றும் ஓவர்நைட் முதிர்வுடன் கூடிய கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கிறது.
பஜாஜ் ஃபின்செர்வ் அசெட் மேனேஜ்மெண்ட் லிமிடெட்- தலைமை செயலாக்க அதிகாரி திரு. கணேஷ் மோகன், கூறியதாவது, ‘‘உங்களது பணம் ஒவ்வொருநாளும் உங்களுக்காக கடுமையாக உழைத்து ஆதாயம் ஈட்ட வேண்டும் என்று பஜாஜ் ஃபின்செர்வ் AMC-ல் நாங்கள் நம்புகிறோம். உங்களது சேமிப்பு அல்லது நடப்புக்கணக்குகளில் ஆதாயம் ஏதும் ஈட்டாமல் வைக்கப்பட்டிருக்கும் பணம் இதற்கு நேர்மாறானதையே செய்கிறது, லிக்விட் ஃபண்டுகள் எளிதில் பணமாக மாற்றும். லிக்விட்டிட்டி திறனையும் மற்றும் இலாப ஆதாயத்தையும் சமநிலைப்படுத்துவதற்கு ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகும். ஒரு சில நாட்கள் என்ற மிகக்குறைந்த காலஅளவிலேயே உங்களது பணம் வளர்ச்சியடைவதை ஓவர்நைட் ஃபண்டுகள் உறுதிசெய்கின்றன. முதலீட்டாளர்களது பாதுகாப்புக்கே நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிப்போம்; அதைத்தொடர்ந்து லிக்விட்டிட்டி மற்றும் அதன் பிறகு இலாப ஆதாயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.’’
இந்த இரு கடன் நிதி திட்டங்களும் ரீடெயில், HNI மற்றும் நிறுவனம் சார்ந்த முதலீட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. பஜாஜ் ஃபின்செர்வ் நிறுவனத்தின் டிஜிட்டல் சேனல்கள் வழியாகவும் மற்றும் நாடெங்கிலுமுள்ள 20,000-க்கும் அதிகமான மியூட்சுவல் ஃபண்டு விநியோகஸ்தர்களிடமும் இத்திட்டங்கள் கிடைக்கும். எதிர்காலத்திற்கு தயார்நிலையிலுள்ள சொத்து மேலாண்மை நிறுவனத்தை உருவாக்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் வெவ்வேறு தொடுமுனைகளிலுமுள்ள முதலீட்டாளர்களுக்கு சேவையாற்ற தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படுகின்ற, ஒன்றுக்கும் மேற்பட்ட பல சேனல்களை உள்ளடக்கிய அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என்ற நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்உத்தியை ஒட்டி இத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
பஜாஜ் ஃபின்செர்வ் அசெட் மேனேஜ்மெண்ட்டால் இப்போது தொடங்கப்பட்டிருக்கும் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் திட்டங்கள், அதன் விரிவான திட்டங்களது தொகுப்பை கட்டமைக்கும் பணியின் தொடக்கமாகும். இந்நிறுவனம், விரைவில் ஈக்விட்டி மற்றும் ஹைபிரிட் திட்டங்களையும் மிக விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. இதன் மூலம் மாறுபட்ட பல்வேறு முதலீடு விருப்பத்தேர்வுகளை தனது வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் ஃபின்செர்வ் வழங்கும்.