பங்குகள் மீது கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கும் மிரே அசெட் ஃபைனான்சியல் சர்வீசஸ்    

0
115

பங்குகள் மீது கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கும் மிரே அசெட் ஃபைனான்சியல் சர்வீசஸ்    

*மிரே அசெட் குழுமத்தின் வங்கி சாரா நிதிசார் சேவைகள் பிரிவான மிரே அசெட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், பங்குச் சந்தைகளின் வர்த்தகம் செய்யப்படும் பங்குகளுக்கு எதிராக கடன்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கியிருக்கிறது

2022 நவம்பர் 16-ம் தேதியன்று வங்கிசாரா நிதி சேவைகள் துறையில் பிரபலமாக இயங்கி வரும் மிரே அசெட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (MAFS), பங்குகளுக்கு எதிராக கடன்கள் (LAS) வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கியிருக்கிறது.    NSDL அமைப்பில் பதிவு செய்திருக்கின்ற டிமேட் கணக்குகளைக் கொண்டிருக்கும் அனைத்துப் பயனாளிகளுக்கும் அவர்களது MAFS மொபைல் செயலி வழியாக இந்த கடன் கிடைக்கப்பெறும்.

மிரே அசெட் குழுமத்தின் ஒரு துணை நிறுவனமான மிரே அசெட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், பங்குச் சந்தையின் பங்குகளுக்கு எதிராக தொடக்கம் முதல் இறுதி வரை டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியிருக்கும் முதல் நிறுவனங்களுள் ஒன்றாகும்.

NSDL டிமேட் கணக்குகளை கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் அவர்களது பங்கு முதலீடுகளை ஆன்லைனில் அடமானம் வைப்பதன் மூலம் ரூ.10,000 முதல் ரூ.1 கோடி வரை இந்த LAS திட்டத்தின் வரம்புக்குட்பட்ட கடனைப் பெறமுடியும்.  இந்நிறுவனத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கின்ற நிறுவனங்களின் பங்குகளது ஒரு பெரிய பட்டியலைச் சேர்ந்த முதலீடுகளிலிருந்து தேர்வுசெய்து கடனுக்காக வாடிக்கையாளர்கள் அவற்றை அடமானம் வைக்க முடியும் மற்றும் அதே நாளன்று இதற்கான கடன் கணக்கை உருவாக்க முடியும்.

இக்கடனானது, ஒரு ஓவர்டிராஃப்ட் (மிகைப்பற்று) வடிவத்தில் கிடைக்குமாறு செய்யப்படும்.  வாடிக்கையாளர்கள் அவர்களுக்குத் தேவைப்படும் பணத்தொகையை எப்பொழுது வேண்டுமானாலும் மற்றும் எங்கிருந்தாலும் தேவைப்படுகிற அளவுக்கு மொபைல் செயலி வழியாக இத்தொகையை அதிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.  அக்கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும்போது இத்தொகையானது அதே நாளில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த ஓவர்டிராஃப்ட் தொகையில் பயன்படுத்தப்பட்ட தொகை மற்றும் பயன்படுத்திய காலஅளவிற்கு மட்டுமே ஆண்டுக்கு 9% என்ற வட்டி விகிதம் பொருந்தும்.  பயனாளிகள், இந்த LAS திட்டத்தின் கீழான ஓவர்டிராஃப்ட் / மிகைப்பற்று வரம்பிற்கு விண்ணப்பிக்கலாம்.  தேவைப்படுகின்ற பணத்தை கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் மற்றும் திரும்பச் செலுத்தலாம், கடனை செலுத்தி கணக்கை முன்கூட்டியே முடிக்கலாம் மற்றும் இதுபோன்ற பல்வேறு செயல்பாடுகளை தங்களது மொபைல் செயலி வழியாக நேரடியாக ஆன்லைனில் மேற்கொள்ளலாம்.

இதற்கு முன்பு வரை சிரமமான விண்ணப்ப செயல்முறையும் மற்றும் கடன் கணக்கைத் தொடங்குவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நீண்ட காலஅளவும் பெரும்பாலான வாடிக்கையாளரை மனச்சோர்விற்கும், ஏமாற்றத்திற்கும் ஆளாக்கியிருக்கிறது.  ஆன்லைனில் மியூச்சுவல் ஃபண்டு (பரஸ்பர நிதி) – க்கு எதிராக கடன் வழங்கும் திட்டத்திற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பை மிரே அசெட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பெற்று வந்திருக்கிறது; இதன் பின்தொடர் நிகழ்வாக இப்போது பங்குகளுக்கு எதிராக கடன் வழங்கும் வசதியையும் சேர்த்திருப்பதன் மூலம் இத்திட்டம் இன்னும் சிறப்பானதாக மாற்றப்பட்டிருக்கிறது.  தாள்கள் அடிப்படையிலான ஆவண பரிசீலனை என்ற சிரமமில்லாமல் அதே நாளில் பங்குகளுக்கு எதிராக கடன் பெறும் திறன் வசதி என்பது இத்திட்டத்தை தீவிரமாக முன்னெடுப்பதற்கான இந்த பிராண்டின் முயற்சியில் ஒரு முக்கியக் காரணியாக இருக்கும்.

மிரே அசெட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் – ன் தலைமை செயலாக்க அதிகாரி (CEO) திரு. கிருஷ்ணா கன்ஹய்யா, இப்புதிய திட்ட அறிமுக நிகழ்வில் பேசுகையில் கூறியதாவது: “ NSDL – ல் இடம்பெற்றுள்ள பங்குகளுக்கு எதிராக டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் வசதியை எமது திட்டங்களின் தொகுப்பில் புதிதாக இப்போது சேர்த்திருப்பது அதிக ஆர்வத்தையும், உற்சாகத்தையும் தருவதாக இருக்கிறது.  NSDL -ன் தொழில்நுட்ப முனைப்புத் திட்டமானது, அவர்களது பங்கு முதலீடுகளை வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் அடமானம் வைக்கவும் மற்றும் அதே நாளன்று அப்பங்குகளுக்கு எதிராக கடன் பெறவும் ஏதுவாக்குமாறு எங்களை அனுமதித்திருக்கிறது.  மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கு எதிராக கடன் வழங்கும் எமது முந்தைய திட்ட அறிமுகத்திற்கு சிறப்பான வரவேற்பை நாங்கள் பெற்றிருக்கிறோம்.  இப்போது பங்குகளுக்கு எதிராக கடன் வழங்கும் இப்புதிய வசதி எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது திட்டமிடப்படாத, குறுகியகால செலவுகளை எதிர்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை கூடுதலாக வழங்கும் என்று நான் நம்புகிறேன்.  பங்கு முதலீட்டாளர்களின் ரீடெய்ல் சந்தை, பெருமளவு வளர்ந்து வருவது LAS திட்டத்தை இன்னும் அதிக முக்கியமானதாக ஆக்குவதற்கு உதவியிருக்கிறது; தங்களது முதலீடுகளை பாதுகாக்கவும் மற்றும் பயணங்கள், மருத்துவ செலவுகள், வீடுகளில் சீரமைப்பு பணிகள் போன்ற குறுகியகால செலவுகளை சமாளிக்க தேவைப்படும் பணத்தை கடனாக வழங்க ஒரே நேரத்தில் வகை செய்கிறது என்பதே இதற்குக் காரணம்.”

நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) – ன் நிர்வாக இயக்குனர் & தலைமை செயலாக்க அதிகாரி திருமதி. பத்மஜா சந்துரு கூறியதாவது: “இந்திய செக்யூரிட்டிஸ் சந்தைக்கு தொழில்நுட்பத்திறன் ஏதுவாக்குனராகவும் மற்றும் அவ்வசதியை வழங்குபவராகவும் NSDL இருந்து வருகிறது.  சந்தைப் பங்கேற்பாளர்களுக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் எளிதான இயக்க செயல்பாடுகள் மற்றும் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு எமது தொழில்நுட்பமும் மற்றும் ஏபிஐ ஸ்டேக்ஸ் – ம் ஏதுவாக்குவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.  டிஜிட்டல் LAS -க்காக NSDL -க்கும் மற்றும் மிரா அசெட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்க்கும் இடையே செயல்படுத்தப்பட்டிருக்கும் இந்த தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, மிகக்குறைவான நேரத்தில் டிஜிட்டல் வழிமுறையில் செக்யூரிட்டிஸ்களுக்கு எதிராக கடன் பெறுவதற்கு NSDL – ன் டிமேட் அக்கவுண்ட்தாரர்களுக்கு ஒரு தனிச்சிறப்பான செயல்திட்ட வசதியை வழங்குகிறது.  கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதிலிருந்து டிமேட் கணக்கில் செக்யூரிட்டிஸ்களை அடமானம் வைப்பது மற்றும் கடன்தொகையை வினியோகிப்பது வரை ஒட்டுமொத்த செயல்முறையும் முற்றிலும் தானியக்க செயல்பாடாக மற்றும் டிஜிட்டல் முறையிலானதாக இருக்கிறது.  தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக அல்லது அவசரநிலை செலவுகளுக்காக விரைவான கடன்பெற வேண்டிய அவசியமுள்ள NSDL டிமேட் அக்கவுண்ட்தாரர்கள், இப்போது வழக்கமான கடன்பெறும் வழிமுறைகளையும் கடந்து அவைகளின்றியே டிஜிட்டல் முறையில் கடனைப் பெற முடியும்.  LAS கடன் வசதிக்காக டிமேட் அக்கவுண்ட்டில் பங்குகள் போன்ற செக்யூரிட்டிஸ்கள் அடமானம் வைக்கப்படும்போது, தாங்கள் அடமானம் வைத்திருக்கின்ற பங்குகளில் பெறப்படுகின்ற கார்ப்பரேட் ஆதாயங்களைப் பெறவும் மற்றும் தொடர்ந்து அவற்றின் பலனை அனுபவிக்கவும் இயலும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.”