துருக்கியில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் சர்வதேச மிஸ் ஆரா அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் சென்னையை சேர்ந்த அனுசிங் பங்கேற்கிறார்
2006 ஆம் ஆண்டுமுதல் நடைபெற்று வரும் மிஸ் ஆரா சர்வதேச அழகிப்போட்டி நேற்று தொடங்கி வரும் செப்டம்பர் 26 ஆம் தேதிவரை துருக்கியில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த மாடலும், பல்வேறு அழகிபோட்டிகளில் பங்குபெற்றவருமான அனுசிங் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளார்.
சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் பட்டம் பெற்றுள்ள இவர், 2022 ஆம் ஆண்டுக்கான மிஸ் சதர்ன் கிரவுன் எனப்படும் தென்னிந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ருபாரு மிஸ் இந்தியா எலைட் அழகி போட்டியில் நேரடி நுழைவு வென்ற அனுசிங், ரூபாரு குழுமத்தால் மிஸ் ஆரா சர்வதேச அழகிப்போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.