திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு ஆன்மீக சேவையாற்றிவரும் பிரம்மரிஷி குருவானந்த மகரிஷி வரும் 9 ஆம் தேதி சென்னையில் மஹாசத்சங்கம் செய்ய உள்ளார்

0
179
திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு ஆன்மீக சேவையாற்றிவரும் பிரம்மரிஷி குருவானந்த மகரிஷி வரும் 9 ஆம் தேதி சென்னையில் மஹாசத்சங்கம் செய்ய உள்ளார் என அவருடைய பிரதான சீடர் பிரகாஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜெயின், ஆச்சார்யா ஸ்ரீனிவாஸ் ஸ்ரீமாலி மற்றும் ஜெகதீஷ் கடவுள் ஆகியோர் பிரம்மரிஷி குருவானந்த மகரிஷி உலக அமைதி, மன ஆரோக்கியத்திற்காக உலகம் முழுவதும் பயணம் செய்து ஆன்மீக பணியாற்றி வருகிறார் என்றும் மாபெரும் தலைவர்கள் எல்லாம் அவருடைய மஹாசத்சங்கதை கேட்டு தெளிவு பெற்றிருக்கிறார்கள் என்றும் கூறினர்.
 திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அவரது பீடத்தில் கோசாலை அமைக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட பசுக்கள் வளர்க்கப்பட்டு நாள்தோறும் பூஜை செய்யப்படுவதாகவும், தலைமை பீடத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அவர்கள், வரும் 9 ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா கன்வென்சன் சென்டரில் குபேர பலன் தரும் சித்குரு தரிசனம் மற்றும் மஹாசத்சங்கம் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.
 இந்நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் அனுமதி மற்றும் பிரசாதம் இலவசமாக வழங்கப்படுவதோடு ,  இதற்காக சென்னை முழுவதும் 60 க்கும் மேற்பட்ட பேருந்துகள் கட்டணமின்றி இயக்கப்பட உள்ளன.

மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சிறப்பு நிகழ்ச்சியாக புகழ்பெற்ற இசையமைப்பாளரும், சிவ பக்தருமான டிரம்ஸ் சிவமணி இசைக்கச்சேரி நடத்த உள்ளதாகவும் பிரகாஷ் ஜெயின் மற்றும் ஜெகதீஷ் கடவுள் தெரிவித்தனர்.