திருநங்கைகள் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்கிற நோக்கத்துடன் மெகா பிளண்ட் ஜூஸ் கடையை அப்சரா ரெட்டி மற்றும் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் திறந்து வைத்தனர்

0
208

திருநங்கைகள் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்கிற நோக்கத்துடன் மெகா பிளண்ட் ஜூஸ் கடையை அப்சரா ரெட்டி மற்றும் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் திறந்து வைத்தனர்

திருநங்கைகள் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்கிற நோக்கத்தோடு அப்சரா ரெட்டியின் கண்ணியத் திட்டம் சார்பாக அப்சரா ரெட்டியால் திருநங்கைகளான மாதுரி மற்றும் மயூராவிற்கு ஜூஸ் கடை தொடங்கி வழங்கப்பட்டது.

“திருநங்கைகளுக்கு கண்ணியமான மற்றும் அதன் தொடர்ச்சியாக பொருளாதார சுதந்திரமான வாழ்க்கை வாழ உரிமை உண்டு” என்கிற நோக்கத்தோடு அப்சரா ரெட்டியால் தொடங்கப்பட்ட திருநங்கைகளுக்கான கண்ணியத் திட்டத்தின் மூலம் இட்லி வண்டிகள், தையல் அலகுகள் உட்பட திருநங்கைகளுக்கு கிட்டத்தட்ட 35 தொழில் முனைவோர் முயற்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக இன்று அடையாறு இந்திரா நகர் பகுதியில் திருநங்கைகளான மாதுரி மற்றும் மயூராவிற்கு வழங்குவதற்காக அப்சரா ரெட்டியால் உருவாக்கப்பட்டுள்ள மெகா பிளண்ட் ஜூஸ் கடையை நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த மெகா பிளெண்ட் ஜூஸ் கடை அடையாறு இந்திரா நகரில் திருநங்கைகளால் நிர்வகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அப்சரா ரெட்டி கூறும்போது, திருநங்கைகள் கண்ணியமாகவும் தைரியமாகவும் வாழக்கூடியவர்கள் எனவே நாம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.

தர்மம் மற்றும் பணம் கொடுப்பது மட்டுமே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாது. தொழில்முனைவு என்பது அவர்கள் தங்களை நிலைநிறுத்துவதற்கான ஒரு வழியாகும்.

இது அவர்களுக்கு சமூகத்தில் கண்ணியமான வாழ்க்கை மற்றும் மரியாதையை வழங்கக் கூடியதாக இருப்பதாக அப்சரா ரெட்டி தெரிவித்தார்.