தாய்லாந்தில் நடைபெறும் மிஸ்டர் குளோபல் போட்டியின் நிகழ்ச்சி இயக்குனராக இந்தியாவிலிருந்து முதன்முறையாக ஃபேஷன் இயக்குனர் கருண்ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

0
66
தாய்லாந்தில் நடைபெறும் மிஸ்டர் குளோபல் போட்டியின் நிகழ்ச்சி இயக்குனராக இந்தியாவிலிருந்து முதன்முறையாக ஃபேஷன் இயக்குனர் கருண்ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் உள்ள மஹாசராகத்தில் 9வது மிஸ்டர் குளோபல் போட்டிகள் நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கி 26 தேதி வரை நடைபெறுகிறது.
 இந்த 10 நாட்களும் 36 நாடுகளிலிருந்து 36 இளைஞர்கள் போட்டிகளில் பங்கேற்று தங்களது நட்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர்.
2014 முதல் நடைபெற்று வரும் மிஸ்டர் குளோபல் நேர்த்தியான பயணம் மூலம் பெருமைமிகு அடையாளமாக மாறியுள்ளது. உலகின் முதன்மையான அழகன் போட்டியான மிஸ்டர் குளோபலில் இந்த ஆண்டு கட்டுமஸ்தான உடல்வாகு மட்டுமின்றி அவர்களது புத்திக்கூர்மையும், கவர்ச்சியையும்  சேர்த்து மதிப்பிடப்படுகிறது.  அதன் காரணமாக உலக அளவில் ஃபேஷன் இயக்குனராக அறியப்பட்ட கருண்ராமன் இந்தப் போட்டிகளை நடத்தும் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் சமூக செயல்பாடுகளில் குறிப்பிடத் தகுந்த பங்களிப்புகளை வழங்கி உள்ள இவர், இந்திய ஃபேஷன் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர். கருண் ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்திய பேஷன் துறையில் ஒரு மகுடமாக பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பிரபல ஃபேஷன் நடன இயக்குனர் கருண் ராமன் மற்றும் ருபாரு Mr.இந்தியா அமைப்பின் பிரசிடென்ட் பங்கஜ் கர்பந்தா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த போட்டியின் organiser President of Mister Global Organization Mr. Pradit Pradinunt.