தானியங்கி அடிப்படையில் மின்சாரத்தை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் எலெக்ட்ரிக் பி-எஸ்.யு.வி. (B-SUV) கார்!
‘டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர்’ காரினை, சென்னையில் அறிமுகப்படுத்துகிறது, லான்சன்!
- தானியங்கி அடிப்படையில் மின்சாரத்தை சார்ஜ் செய்யும் வலுவான ஹைபிரிட் மின்சாதன பவர் டிரைன் வசதி கொண்ட இப்பிரிவில், எரிபொருள் சிக்கனமான வாகனம் இதுவே!
- சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற டொயோட்டாவின் தானியங்கி சார்ஜிங் வசதி தொழில்நுட்பம் கொண்ட வாகனங்கள் (SHEV) இப்போது இந்தியாவில்!
சென்னை, தமிழகத்தின் முன்னணி கார் விற்பனை ஷோரூம்களில் ஒன்றாகிய லான்சன் டொயோட்டா (Lanson Toyota), அர்பன் குரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) மாடலை சென்னையில் இன்று (அக். 8, 2022) அறிமுகம் செய்தது. இந்தியாவின் முதலாவது தானியங்கி சார்ஜிங் வசதி கொண்ட வலுவான ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனமான பி-எஸ்.யு.வி. விலை ரூ. 15,11,000 முதல் ஆரம்பமாகிறது.
நடுத்தர ரக பிரிவைச் சேர்ந்த இந்த எஸ்.யு.வி. வாகனம் மின் வாகனப் பிரிவில் டொயோட்டா நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டதாகவும் இந்தியாவில் கட்டுபடியாகும் விலையில் கிடைக்கும் ஹைபிரிட் காராகவும் திகழ்கிறது.
கார் அறிமுக விழாவில் லான்சன் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் (Lanson Motors Pvt. Ltd) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு. எம். லங்காலிங்கம் (Mr. M. Lankalingam), செயல் இயக்குநர் திரு சிவங்கா லங்காலிங்கம் (Mr. Shivanka Lankalingam), டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸின் துணைத் தலைவர் திரு தகாஷி தகாமியா (Mr. Takashi Takamiya), பொதுமேலாளர் திரு ராஜேஷ் மேனன் (Mr. Rajesh Menon), துணை மேலாளர் திரு பிரதீப் ராய் (Mr. Pradeep Rai) ஆகியோர் பங்கேற்றனர்.
பெட்ரோல் வாகனம் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒருங்கே கொண்டதாக டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர் உள்ளது. சவுகர்யமான சவாரி மற்றும் சப்தமில்லாத பயணம், சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானதாக திகழ்கிறது. சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 27.97 கி.மீ. தூரம் ஓடி எரிபொருள் சிக்கனமான வாகனமாக நிரூபித்துள்ளது. அனைத்து சக்கர சுழற்சி (All-wheel-drive) வசதி கொண்டதாகவும் இந்நிறுவனத்தின் டி.என்.ஜி.ஏ. அல்லது கே-சீரிஸ் (TNGA or K-series) 1.5 லிட்டர் சிலிண்டர் உள்ள என்ஜினைக் கொண்டதாகவும் வந்துள்ளது.
1.5 லிட்டர் திறன் கொண்ட என்ஜினில் டி.என்.ஜி.ஏ. அட்கின்சன் சைக்கிள் என்ஜின் (TNGA Atkinson Cycle engine) நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இது 92 ஹெச்.பி. திறன் மற்றும் 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இத்துடன் இ.சி.வி.டி. கியர் பாக்ஸ் (eCVT gearbox) உள்ளது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 79 ஹெச்.பி. திறனையும் 141 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக்கூடியது. இதில் 177.6 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. நடுரக ஹைபிரிட் மாடலில் 1.5 லிட்டர் கே15சி (K15C) ரக என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 103 ஹெச்பி திறனையும் 137 நியூட்டன் மீட்டர் டார்க் விசையையும் வெளிப்படுத்தும். இதில் 5 மேனுவல் கியர் மற்றும் 6 தானியங்கி கியர் வசதி உள்ளதாக மாடல்கள் வந்துள்ளன. நடுத்தர ரக பிரிவில் வந்துள்ள இந்த எஸ்.யு.வி. மாடல் மட்டுமே அனைத்து சக்கர சுழற்சி கொண்டதாக விளங்குகிறது.
அர்பன் குரூஸர் ஹைரைடர் மாடலின் வெளிப்புற தோற்ற சிறப்பம்சங்கள்: எல்.இ.டி. புரொஜக்டர் முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் இரட்டை விளக்குகள், ரூஃப் ரெயில், பின்புறம் ஸ்போர்டி தோற்றத்திலான ஸ்கிட் பிளேட், இரட்டை வண்ணம், அழகிய தோற்றத்திலான மெல்லிய 17 அங்குல அலாய் சக்கரம், பின்புறம் எல்.இ.டி. விளக்குகள் இதற்கு அழகிய தோற்றப் பொலிவை அளிக்கிறது.
இணைப்பு வசதியைப் பொறுத்தமட்டில் ரிமோட் மூலம் காரை ஸ்டார்ட் செய்வது, ஸ்மார்ட் கடிகாரம் மூலம் இணைப்பை ஏற்படுத்துவது, குரல்வழி கட்டுப்பாட்டு வசதி உள்ளிட்டவற்றைக் கொண்டது. கறுப்பு மற்றும் பிரவுன் நிறத்திலான உள்புற பகுதியைக் கொண்டது. சவுகர்யமான பயணத்திற்காக மிருதுவான தோல் இருக்கைகள் அத்துடன் காற்றோட்ட வசதி கொண்டதாக இருப்பதால் நீண்ட பயணத்திலும் துணிகள் வியர்வையில் ஈரமாகாது. 360 டிகிரி கோணத்திலான கேமரா வசதி, நெருக்கடியான சாலைகளைப் பற்றி நேவிகேஷன் மூலம் அறியும் வசதி, தலைக்குமேல் டிஸ்பிளே உள்ளிட்டவை இடையூறின்றி காரை ஓட்ட வழியேற்படுத்துகிறது.
இந்தப் புதிய கார் அறிமுகம் குறித்து திரு லங்காலிங்கம் கூறுகையில், “அர்பன் குரூஸர் கார் அறிமுகம் மூலம் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் டொயோட்டா நிறுவனத்தின் தானியங்கி சார்ஜிங் வசதி கொண்ட தொழில் நுட்பத்துக்கு (Strong Hybrid Electric Vehicle) கிடைத்த அங்கீகாரம் இந்தியாவிலும் கிடைக்கும். மின்சார வாகனங்கள் அதிகரிப்பதற்கு முன்னோட்டமாக இந்தக் காரின் வருகை உள்ளது. சென்னை நகரவாசிகள் இப்புதிய காம்பாக்ட் எஸ்.யு.வி. கார் அளிக்கும் அனுபவத்தை ரசித்து வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். டொயோட்டா கார்களைப் பொறுத்தமட்டில் அந்நிறுவனத் தயாரிப்புகள் மீதான நம்பகத் தன்மைதான் பிரதான காரணமாகும். டொயோட்டா நிறுவனத்தின் விற்பனையாளரான எங்கள் லான்சன் டொயோட்டா, வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை தொடர்ந்து வழங்குவதில் உறுதியுடன் உள்ளோம். டொயோட்டாவுடன், நாங்கள் இணைந்து அர்பன் குரூஸர் ஹைரைடர் வாகனத்தை இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடலாக உயர்த்த நிச்சயம் உதவுவோம்’’ எனக் கூறினார்.
லான்சன் மோட்டார்ஸ் விற்பனையகம் 2000-ஆவது ஆண்டில் தொடங்கப்பட்டு சென்னை மற்றும் வட தமிழக மக்களுக்கு டொயோட்டா கார்களை பயன்படுத்துவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப் பெரிய விற்பனையாளராக இந்நிறுவனம் திகழ்கிறது. லான்சன் நிறுவனம் 13 ஷோரூம்களையும், 12 டச் பாயின்டுகளையும் மாநிலம் முழுவதும் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தில் 1,500 பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் நாளொன்றுக்கு 550 – 600 கார்களுக்கு சர்வீஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.