சென்னை சிட்டி சென்டரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை கவுரவிக்கும் விதமாக, Vasco People’s Choice Awards என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இத்தகைய விருதுகள் வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.முதல் முறையாக வழங்கப்பட்ட இந்த சிறப்பு விருதுகளை, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த பல்வேறு பிரபல விடுதியின் உரிமையாளர்கள் தட்டிச் சென்றனர். இந்த விருது வழக்கும் விழாவில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், * பிக்பாஸ் *பாலாஜி முருகதாஸ், கவுதம் ஜெயின், சேஷா சாய், ரங்கநாதன், பிரகாஷ், யஷ்வந்த், ஷீதல், பிரவீன், சி.கே.குமாரவேல் மற்றும் ஹக் குரூஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

அதேபோல், சிறந்த கேக் மற்றும் பேக்கரி வகைகளுக்கான விருதை லா சாக்லேட் மற்றும் சிறந்த பஞ்சாபி உணவுக்கான விருதை பங்ரா ஆகியவற்றிற்கு நடிகர் பாலாஜி முருகதாஸ் வழங்கி கவுரவித்தார்.