டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் நடத்தப்பட்ட ஃபேஷன் ஷோவில் ஸ்டூடியோ 149 நிறுவனரும் சிறந்த ஆடை வடிவமைப்பாளருமான ஸ்வாதி புருஷோத்தமனுக்கு  இந்த ஆண்டின் சிறந்த மணப்பெண் ஆடை வடிவமைப்பாளர் மற்றும் சுப நிகழ்வுகளுக்கான ஆடை வடிவமைப்பாளர் ஆகிய 2 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன

0
152
டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் நடத்தப்பட்ட ஃபேஷன் ஷோவில் ஸ்டூடியோ 149 நிறுவனரும் சிறந்த ஆடை வடிவமைப்பாளருமான ஸ்வாதி புருஷோத்தமனுக்கு  இந்த ஆண்டின் சிறந்த மணப்பெண் ஆடை வடிவமைப்பாளர் மற்றும் சுப நிகழ்வுகளுக்கான ஆடை வடிவமைப்பாளர் ஆகிய 2 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாட்டில்  ஃபேஷன் ஷோ நடைபெற்றது.
 இதில் மணமகன் மற்றும் மணமகளுக்கான பிரத்யேக ஆடைகள் மற்றும் திருமண விழாக்கோல ஆடைகள்  அணிந்து ஆண்களும் பெண்களும் ஒய்யார நடைபோட்டனர்.
இந்த ஃபேஷன் ஷோவில் நடிகர் சாய் சித்தார்த், நடிகைகள் தேஜு அஸ்வினி, மீனாட்சி கோவிந்தராஜன் உட்பட 17 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் கலந்து கொண்டனர்.
45 வித ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆடை வடிமைப்பாளர் ஸ்வாதி புருஷோத்தமனுக்கு இந்த ஆண்டின் சிறந்த மணப்பெண் ஆடை வடிவமைப்பாளர் மற்றும் சுப நிகழ்வுகளுக்கான ஆடை வடிவமைப்பாளர் ஆகிய 2 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.