ஜூரா (Zuora) சென்னையில் புதிய அலுவலகத்துடன் இந்தியாவின் தடத்தை விரிவுபடுத்துகிறது

0
159

ஜூரா (Zuora) சென்னையில் புதிய அலுவலகத்துடன் இந்தியாவின் தடத்தை விரிவுபடுத்துகிறது

200 பேர் திறன் கொண்ட, புதிய அலுவலகத்தில் உள்ள பொறியியல் திறமை, சந்தா பொருளாதாரத்தில் உலகளாவிய தயாரிப்பு கண்டுபிடிப்புகளை இயக்க உதவும்

 இந்தியாவில் ஜூரா குழு கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் பணியமர்த்தலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது

சென்னை, தொடர்ச்சியான வருவாய் வணிகங்களுக்கான முன்னணி பணமாக்குதல் தளம் வழங்குநரான Zuora, Inc. (NYSE: ZUO), யு.எஸ் க்கு வெளியே உள்ள மிகப்பெரிய ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னையிலுள்ள பிரிகேட் வேர்ல்டு டிரேடு சென்டரில் புதிய அலுவலகத்தை திறப்பதாக அறிவித்தது. இந்த அலுவலகம் இன்று ஜூரா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. டியென் ட்சுவோ (Tien Tzuo) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இது உலகளாவிய தயாரிப்பு கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும் தயாரிப்பு மற்றும் பொறியியல் திறமைகளுக்கான மையமாகும்..

ஜூராவின் புதிய சென்னை அலுவலகம் 200 பேருக்கு வசதி கொண்டதாக 20,115 சதுர அடியில் உள்ளது. அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வளங்களை கொண்ட இந்த அலுவலகம் குழு ஒத்துழைப்பு மற்றும் சுதந்திரமான கவனம் ஆகிய இரண்டிற்கும் இடம் உள்ளது. சக பணியாளர்கள் வேலைக்கு அப்பால் இணைவதற்கு இது ஒரு கிச்சன் மற்றும் கஃபே பகுதியையும் வழங்குகிறது.

“பணியின் எதிர்காலத்திற்கான எங்கள் பார்வையை ஆதரிக்கும் வகையில் புதிய சென்னை அலுவலகத்தை நாங்கள் தேவைக்கேற்ப வடிவமைத்துள்ளோம். குழுக்கள் ஒத்துழைப்பு, நெகிழ்வான மற்றும் உள்ளடக்கிய சூழலில் எவ்வாறு சிறப்பாக செயல்படுகின்றன என்பதை தீர்மானிக்க அதிகாரம் அளிக்கிறோம்“ என்று ஜூரா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. டியென் ட்சுவோ கூறினார். “இந்தியா ஸ்கில்டு திறமையாளர்களுக்கான ஒரு உத்திசார் மையமாக உள்ளது. மேலும் ஜூராவின் குழுவை வளர்ப்பதற்கும், தயாரிப்பு கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்துவதற்கும், சந்தா பொருளாதாரத்தில் உலகின் சிறந்த நிறுவனங்கள் வெற்றிபெற உதவுவதற்கும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”

இந்தியாவில் ஜூரா குழு கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து நாடு முழுவதும் 450 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு வருடங்கள் மற்றும் அதற்கு பிறகும் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வர்த்தகம் செய்வதற்கான அடிப்படையில் புதிய வழியை பிரசாரம் செய்வதற்கான ஒரு பார்வையில் இருந்து பிறந்த ஜூரா 2007 இல் தொடங்கப்பட்டது. திரு. டியென் ட்சுவோ ஒரு முறை தயாரிப்பு விற்பனைக்கு பதிலாக தொடர்ச்சியான, மக்களை மையமாக கொண்ட சந்தா சேவைகளை வழங்குவதற்கான ஒரு பெரிய பொருளாதார மாற்றத்தை அங்கீகரித்த போது “சந்தா பொருளாதாரம் என்ற வார்த்தையை உருவாக்கினார்.” இந்த மாற்றம் புதிய டிஜிட்டல் சேவைகளின் உயர்வுக்கு வழிவகுத்தது. தொடர்ந்து வாடிக்கையாளர் உறவுகளில் வேரூன்றி, விரும்பிய முடிவுகள் மற்றும் அனுபவங்களில் கவனம் செலுத்துகிறது. பாரம்பரிய, தயாரிப்பு அடிப்படையிலான வணிகங்களை விட இந்த வணிகங்கள் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகின்றன: ஜூராவின் சந்தா பொருளாதார குறியீட்டில் உள்ள சந்தா வணிகங்கள் எஸ்&பி 500 வளர்ச்சி விகிதங்களை கடந்த பத்தாண்டுகளில் 4.6 மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் தகவலுக்கு www.zuora.com இணையதளத்தை பார்க்கவும்.