ஜூனியர் குப்பண்னா உணவகத்தின் ஒரு அங்கமான ஜூனியர் மெஸ்ஸில் கானா பாடல்களுடன், புதிய உணவுப்பட்டியலை பாடகர்கள் வேல்முருகன், கானா அச்சு, கானா விமலா உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தினர்.
கொங்கு உணவுகளுக்கு புகழ்பெற்ற ஜூனியர் குப்பண்ணா உணவு குழுமத்தின் ஜூனியர் மெஸ் கொங்கு மற்றும் தென்னிந்திய உணவுகளின் அசல் சுவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஜூனியர் மெஸ்ஸில், கானா நைட்ஸ் எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உள்ளூர் இசை மற்றும் சென்னையின் கானா பாடல்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கானா புகழ் கலைமாமணி வேல்முருகன், கானா அச்சு மற்றும் கானா விமலா( திருநங்கை ) cock studio புகழ் ஆகியோர் தங்களது தனித்துவமான பாடல்கள் மூலம் வாடிக்கையாளர்களை அசத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஜூனியர் மெஸ்ஸின், சிக்கன் சிந்தாமணி, சிக்கன் கைமா, சிக்கன் நல்லம்பட்டி, மூளை மிளகு ஃப்ரை, சிக்கன் காட்டு வறுவல் மற்றும் மட்டன் கதம்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய உணவுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.
Location:
Junior Mess from Junior Kuppanna
Old no. 67, New no. 133,Royapettah High Road,
Mylapore,Chennai – 600004
Phone: 7358113773