ஜியோ பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற  உலக சுற்றுச்சூழல் தின பசுமை மாரத்தானை நடிகை சாக்ஷி அகர்வால், ஹேமா ருக்மணி, திரு.ஏ.கனகராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

0
173
ஜியோ பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற  உலக சுற்றுச்சூழல் தின பசுமை மாரத்தானை நடிகை சாக்ஷி அகர்வால், ஹேமா ருக்மணி, திரு.ஏ.கனகராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் க்ரீன் ரன் தூய்மையான சுற்றுச்சூழலுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பசுமை மாரத்தான் நடைபெற்றது. 1 கி.மீ, 3 கி.மீ மற்றும் 5 கி.மீ என 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தானில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
எக்ஸ்னோரா அறக்கட்டளை தலைவர் திரு. செந்தூர் பாரி, அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளரும், ஜியோ இந்தியா அறக்கட்டளையின் கெளரவத் தலைவருமான டாக்டர்.ஜி.ஏ. ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.நடிகை சாக்ஷி அகர்வால், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி, ஜெயா குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கனகராஜ், ஜியோ இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டி.பிரியா ஜெமிமா மற்றும் இந்த மாரத்தானில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு ஓட்டப்பந்தய வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினர்.