ஜார்கண்ட் சேர்ந்த 10 மாணவர்களின் விமான பயண கனவை நனவாக்கிய மெட்ராஸ் ஏங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 மற்றும் தன்பாத் ரவுண்ட் டேபிள் 342 அமைப்புகள்

0
178

ஜார்கண்ட் சேர்ந்த 10 மாணவர்களின் விமான பயண கனவை நனவாக்கிய மெட்ராஸ் ஏங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 மற்றும் தன்பாத் ரவுண்ட் டேபிள் 342 அமைப்புகள்

மெட்ராஸ் ஏங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 மற்றும் தன்பாத் ரவுண்ட் டேபிள் 342 அமைப்புகள் இணைந்து ‘ஃப்ளைட் ஆஃப் ஃபேன்டஸி’ என்ற திட்டத்தின் மூலம் ஜார்கண்ட் சேர்ந்த 10 மாணவர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து ஒருநாள் முழுவதும் இன்ப சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தனர். 
விமானத்தில் பறக்கும் கனவு நிஜமாகும் எதிர்பார்ப்புடன் பயணம் செய்த மாணவர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இந்த 10 மாணவர்களும் தன்பாத்தில் இருந்து விமானம் மூலம் கொல்கொத்தா அழைத்து செல்லப்பட்டு அங்கு ஒருநாள் சுற்றுலாவை முடித்த பின்னர் அங்கிருந்து மீண்டும் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். பின்னர் வாகனங்கள் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஸ்னோ கிங்டம் மற்றும் கடல் உயிரினங்கள் காட்சியகங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு உணவு மற்றும் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பினர் மூலம் சிறப்பாக கவனித்துக் கொள்ளப்பட்டனர்.  மேலும் மாணவர்களின் இந்த சிறப்பான நாளை மகிழ்ச்சியாக நிறைவு செய்ய கடற்கரைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வில் தனது மகிழ்ச்சியையும் திருப்தியையும் வெளிப்படுத்திய மெட்ராஸ் ஏங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 இன் தலைவர் விபுல் ஜெயின் இந்த பயணம் நான்காவது ‘ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி’ எனக்குறிப்பிட்டார்.   குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பது தங்களை உற்சாகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
தன்பாத் ரவுண்ட் டேபிள் 342 இன் தலைவர் சரப்ஜீத் சிங்கும் தனது மனமார்ந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார், மேலும் இது அவர்களது முதல் Flight of Flighty என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏரியா 16 பகுதி தலைவர் சுபம் சபூ, ராஜேஷ், சஞ்சய் ராமசாமி, பிரவேஷ்,  நரேஷ்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.