சென்னை YMCA திடலில் 22 ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ள பிரபல பின்னணி பாடகர் சித்து ஸ்ரீராம் பங்கு பெறும் நேரலை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாருங்கள்

0
199

சென்னை YMCA திடலில் 22 ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ள பிரபல பின்னணி பாடகர் சித்து ஸ்ரீராம் பங்கு பெறும் நேரலை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாருங்கள்

நீ சிங்கம் தான் – சித் ஸ்ரீராம் என்கிற நேரலை லைவ் இசை நிகழ்ச்சி ஜூன் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. YMCA திடலில் மாலை 6:00 மணிக்கு தொடங்கும் இந்த இசை நிகழ்ச்சி மூலம் சென்னை மட்டுமின்றி பிற மாநில இசை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவிருக்கிறார் பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம். சித் ஸ்ரீராமின் வசீகரிக்கும் குரலுக்கும், கேட்பவர்களை மயக்க வைக்கும் இசைக்கும் மயங்காத ரசிகர்கள் இல்லை என்ற அளவுக்கு அன்றைய நிகழ்ச்சி அமையும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சித் ஸ்ரீராம் அண்மையில் பாடி பிரபலமான பாடல்கள் ஒன்றிணைக்கப்பட்டு கோச்செல்லா Valley இசை மற்றும் கலை விழா 2024, NPR TINY DESK COCERT ஆகியவை இணைந்து ஒருங்கிணைக்கிறது.  நிகழ்வில் பங்கேற்பதின் மூலம் அன்றைய நிகழ்ச்சி மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமையும் என்பதில் மாற்றில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ஏ ஆர் ரகுமானால் வழிகாட்டப்பட்ட சித் ஸ்ரீராமின் இசை பயணம் அவரது தனித்துவமான திறமை மற்றும், கைவினைதிறனுக்கான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று ஆகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் ஆங்கில உட்பட பல மொழிகளில் பாடல்களைப் பாடி சாதித்துள்ள சித் ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி சென்னை மட்டுமின்றி, உலக ரசிகர்கள் முன் நேரடி நிகழ்வாக நடைபெற உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சித் ஸ்ரீராம் தனது சொந்த ஊரில் நேரலை நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை சந்திக்க இருப்பதால், வரவிருக்கும் நேரடி நிகழ்வு இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சித் ஸ்ரீராம் லைவ் இன் கன்சர்ட் நிகழ்ச்சியில், அவரது சிறந்த தமிழ் மற்றும் தெலுங்கு ஹிட் பாடல்கள் மட்டுமின்றி, ரசிகர்களின் விருப்ப பாடல்களின் தொகுப்புகளைக் கொண்ட இசை நிகழ்ச்சியாக அன்றைய மாலை நடைபெறும் நிகழ்ச்சி அமைய உள்ளது. சித் ஸ்ரீராமின் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியை நேரலையில் காண்பதற்கான இந்த வாய்ப்பை இசை பிரியர்களும், இசை ஆர்வலர்களும் பயன்படுத்திக் கொள்ள சிறந்த வாய்ப்பாகும்.

Paytm insider மூலம் உங்களது டிக்கெட் இப்பொழுதே முன் பதிவு செய்யலாம்.